பாறையில் ஏறி செல்பி எடுத்த புதுமண தம்பதிகளுக்கு நேர்ந்த விபரீதம்!

  • IndiaGlitz, [Tuesday,April 05 2022]

திருமணமாகி சில நாட்களே ஆன புதுமண தம்பதிகள் பாறை மீது ஏறி செல்ஃபி எடுத்த போது ஏற்பட்ட விபரீதத்தால் பெரும் அதிர்ச்சி ஏற்பட்டுள்ளது.

கோழிக்கோடு மாவட்டம் பலேரி என்ற பகுதியைச் சேர்ந்த ரஜினிலால் மற்றும் கனிகா ஆகியோருக்கு மார்ச் 14-ஆம் தேதி திருமணம் நடைபெற்றது. புதுமணத் தம்பதி தங்கள் உறவினர்களுடன் ஜானகிக்காடு என்ற இடத்திற்கு ஃபோட்டோஷூட்டுக்காக சென்றனர்.

அங்கிருந்த பாறை மீது ஏறி புதுமணத் தம்பதி செல்பி எடுக்க முயன்றனர். அப்போது திடீரென கால் இடறி இருவரும் ஆற்றினுள் விழுந்தனர். அவர்களை ஆற்றுநீர் இழுத்துச் சென்றது.

இதுகுறித்த தகவல் அறிந்த அங்கிருந்த உறவினர்களும் அந்த பகுதி மக்களும் இருவரையும் காப்பாற்ற முயன்றனர். இதில் கனிகாவை உயிருடன் அவர்கள் மீட்டாலும் ரஜினிலாலை பிணமாகத்தான் மீட்க முடிந்தது.

இந்த நிலையில் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ள கனிகாவின் உடல்நிலையும் கவலைக்கிடமாக உள்ளதாக மருத்துவர்கள் கூறியிருப்பதால் உறவினர்கள் கடும் அதிர்ச்சி அடைந்துள்ளனர். திருமணமாகி மூன்றே வாரத்தில் புதுமாப்பிள்ளை ரஜினிலால் பலியாகியிருப்பதும் புதுப்பெண் கவலைக்கிடமாக இருப்பதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இந்த பகுதியில் அடிக்கடி உயிர்பலி நடப்பதால் அங்கு அபாய எச்சரிக்கை போர்டு வைத்திருப்பதாகவும், ஆனால் அதையும் மீறி மக்கள் செல்வதாகவும் அந்த பகுதி மக்கள் கூறுகின்றனர்.
 

More News

அடுத்தடுத்து இரண்டு படங்களை இயக்கும் ஏ.ஆர்.முருகதாஸ்? ஹீரோக்கள் யார் யார் தெரியுமா?

அஜித் நடித்த 'தீனா' என்ற திரைப்படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமான ஏஆர் முருகதாஸ் அதன்பின்னர் ரஜினிகாந்த், விஜயகாந்த், விஜய், சூர்யா,  உள்பட பல முன்னணி நடிகர்களின் திரைப்படங்களை

அவரது மூளையை ஸ்கேன் செய்து பார்ப்பேன்… கோலியின் மனம் கவர்ந்த இவர் யார் தெரியுமா?

கால்பந்து உலகின் முடிசூடா மன்னனாகத் திகழ்ந்துவரும் கிறிஸ்டியானோ ரொனால்டோ பற்றி இந்தியக் கிரிக்கெட் வீரர் விராட் கோலி

10 வருஷமா பேட்டி கொடுக்காதது ஏன்? நெல்சனிடம் மனம் திறந்த தளபதி விஜய்!

தளபதி விஜய் பத்தாண்டுகளுக்குப் பிறகு 'பீஸ்ட்' படத்திற்காக சன் டிவியில் பேட்டி அளித்துள்ளார் என்பதும் அந்தப் பேட்டி வரும் பத்தாம் தேதி இரவு 9 மணிக்கு சன் டிவியில் ஒளிபரப்பாக உள்ளது

குட்டி ரசிகைக்கு சர்ப்பிரைஸ் கொடுத்த மெகா ஸ்டார் நடிகர்… நெகிழ வைக்கும் புகைப்படம்!

கேரளா மாநிலம் கொச்சியில் உள்ள தனியார் மருத்துவமனையில் அரிய வகை நோயால் பாதிக்கப்பட்ட சிறுமி

சன்னிலியோனுக்காக இணையும் விஜய்சேதுபதி - வெங்கட்பிரபு!

பிரபல பாலிவுட் கவர்ச்சி நடிகை சன்னி லியோன் நடித்து வரும் தமிழ் திரைப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை நடிகர் விஜய் சேதுபதி மற்றும் இயக்குனர் வெங்கட் பிரபு வெளியிட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.