13 நாட்களில் அடுத்த படத்தின் கதை ரெடி: பிரபல இயக்குனர் தகவல் 

பார்த்திபன், தேவயானி, நந்திதா தாஸ் நடித்த ‘அழகி’ என்ற படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமாகி அதன் பின்னர் ’சொல்ல மறந்த கதை’, ‘தென்றல்’, ‘பள்ளிக்கூடம்’, ‘ஒன்பது ரூபாய் நோட்டு’ உள்ளிட்ட படங்களை இயக்கியவர் பிரபல இயக்குநர் தங்கர்பச்சான்.

இவர் கடந்த சில மாதங்களாக கொரோனா வைரஸ் ஊரடங்கு காரணமாக வீட்டுக்குள்ளேயே இருந்ததால் தனது சிந்தனை நசுக்கப்பட்டு தவித்து இருந்ததாகவும் ஆனால் தற்போது ஊரடங்கில் தளர்வு ஏற்பட்ட பின்னர் இயற்கையின் அரவணைப்பில் 13 நாட்களில் தனது அடுத்த படத்தின் கதை திரைக்கதையை எழுதி முடித்து விட்டதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

எக்காலத்துக்கும் பேசப்படும் வகையில் அமைந்துள்ள இந்த கதையின் படப்பிடிப்பு மிக விரைவில் தொடங்கும் என்றும் அவர் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் தனது சமூக வலைத்தளத்தில் கூறியதாவது: ஆறு மாத காலம் வீட்டிற்குள்ளேயே முடங்கிக் கிடந்து சிந்தனை நசுக்கப்பட்டு தவித்திருந்தேன். இயற்கையின் அரவணைப்பில் 13 நாட்கள் இரவும் பகலும் ஓய்வின்றி இடைவிடாமல் எந்நாளும் எக்காலத்திற்கும் பேசப்படும் எனது அடுத்த படத்திற்கான ஒரு சிறந்த திரைக்கதையை தற்போது தான் எழுதி முடித்தேன்.

More News

வலிமை படத்தில் மாற்றம் செய்ய சொன்ன அஜித்: 'விஸ்வாசம்' காரணமா? 

தல அஜித் நடித்த 'விஸ்வாசம்' திரைப்படம் ஒரு ஜனரஞ்சகமான மசாலா திரைப்படம் என்றாலும் அந்த படத்தில் இடம்பெற்ற சென்டிமென்ட் காட்சிகள் பெரும்பாலானோரை கவர்ந்தது.

தனது பூர்வீக வீட்டை யாருக்கு எழுதிக்கொடுத்தார் எஸ்பிபி: ஒரு ஆச்சரிய தகவல்!

பிரபல பின்னணி பாடகர் எஸ்பி பாலசுப்பிரமணியம் அவர்கள் கடந்த 25ஆம் தேதி காலமான நிலையில் அவருக்கு ஒட்டுமொத்த திரையுலகினர்களும் இரங்கல் தெரிவித்தனர் என்பது தெரிந்ததே

எனது வாழ்க்கை பாதையை மாற்றியவர் இவர்தான்: இயக்குனர் பாண்டிராஜ் பெருமிதம்

இயக்குனர் பாண்டிராஜ் 'பசங்க' என்ற திரைப்படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானார் என்பதும் அந்தப் படம் இரண்டு தேசிய விருதுகளை பெற்றது என்பதும் தெரிந்ததே

மேடையில் மனைவியை கிண்டல் செய்த எஸ்பிபி: அரிய வீடியோ வைரல்!

பிரபல பின்னணி பாடகர் எஸ்பி பாலசுப்பிரமணியம் அவர்கள் சமீபத்தில் காலமான நிலையில் அவருடன் பழகிய நாட்கள், அவருடன் கலந்துகொண்ட அனுபவங்கள் குறித்து

கொரனோ வந்தால் மம்தா பானர்ஜியை கட்டிப்பிடிப்பேன்: பாஜக பிரமுகரின் சர்ச்சை பேச்சு

பாஜக பிரமுகர்கள் சிலர் கடந்த 6 ஆண்டுகளாக அவ்வப்போது சர்ச்சைக்கு சர்ச்சைக்குரிய வகையில் பேசி வருகின்றனர் என்பதும் சர்ச்சைக்குரிய பேச்சால் அவர்கள்