close
Choose your channels

சூர்யா ரசிகர்களுக்கு விரைவில் இரட்டை விருந்து!

Saturday, January 12, 2019 • தமிழ் Comments

சூர்யா நடிப்பில் செல்வராகவன் இயக்கத்தில் 'என்.ஜி.கே' திரைப்படமும், கே.வி.ஆனந்த் இயக்கத்தில் 'காப்பான்' திரைப்படமும் உருவாகி வரும் நிலையில் இரண்டு படங்களின் படப்பிடிப்புகளும் நிறைவடையும் நிலையில் உள்ளதாக செய்திகள் வெளிவந்துள்ளது.

'என்.ஜி.கே' படத்தின் படப்பிடிப்பு கிட்டத்தட்ட முடிந்துவிட்டதாகவும், இன்னும் ஒருசில நாட்களில் இந்த படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்த செய்தி வெளிவர வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது. அதேபோல் தொடக்கம் முதலே விறுவிறூப்பாக படப்பிடிப்பு நடந்து வரும் 'காப்பான்' திரைப்படத்தின் படப்பிடிப்பும் வரும் மார்ச் மாதம் முடிவடைய வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.

இந்த இரு படங்களின் போஸ்ட் புரடொக்சன்ஸ் பணிகளும் விரைவில் தொடங்கப்பட்டு சூர்யாவின் ரசிகர்களுக்கு அடுத்தடுத்து இரட்டை விருந்தாக பரிமாற வாய்ப்பு இருப்பதாக தெரிகிறது.

Get Breaking News Alerts From IndiaGlitz