close
Choose your channels

சூர்யாவின் என்.ஜி.கே: தமிழ் சினிமாவில் செய்த முதல் சாதனை

Saturday, May 25, 2019 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

100 வருட தமிழ் சினிமாவில் வரும் 31ஆம் தேதி ரிலீஸ் ஆகும் சூர்யாவின் 'என்.ஜி.கே' திரைப்படம் ஒரு புதிய சாதனையை செய்துள்ளது.

சூர்யா நடிப்பில் இயக்குனர் செல்வராகவன் இயக்கத்தில் ட்ரீம்வாரியர் பிக்சர்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் உருவாகியுள்ள 'என்.ஜி.கே' திரைப்படம் உலகம் முழுவதும் வரும் 31ஆம் தேதி வெளியாகவுள்ளது. இந்த படத்தின் வியாபாரம் கிட்டத்தட்ட உலகம் முழுவதும் முடிந்துவிட்ட நிலையில் தற்போது இந்த படம் தென்கொரியாவிலும் ரிலீஸ் ஆகவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதன்மூலம் தென்கொரியாவில் ரிலீஸ் ஆகும் முதல் தமிழ்த்திரைப்படம் 'என்.ஜி.கே' தான் என்ற பெருமையையும் இப்படம் பெறுகிறது

சூர்யா, ரகுல் ப்ரித்திசிங், சாய்பல்லவி, தேவராஜ், உமா பத்மநாபன், இளவரசு, பொன்வண்னன், பாலாசிங், தலைவாசல் விஜய், வேலராமமூர்த்தி, குருசோமசுந்தரம் உள்பட பலர் நடித்துள்ள இந்த படத்திற்கு யுவன்ஷங்கர் ராஜா இசையமைத்துள்ளார். சிவகுமார் விஜயன் ஒளிப்பதிவில் பிரவீண் கே.எல் படத்தொகுப்பில் இந்த் பட்ம் உருவாகியுள்ளது

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.