'என்.ஜி.கே' குறித்த புதிய அப்டேட்: சூர்யா ரசிகர்கள் உற்சாகம்

  • IndiaGlitz, [Friday,November 30 2018]

சூர்யா நடிப்பில் செல்வராகவன் இயக்கி வரும் 'என்.ஜி.கே' திரைப்படத்தின் புதிய அப்டேட் கேட்டு சூர்யாவின் ரசிகர்கள் படக்குழுவினர்களுக்கு பல மாதங்களாக வேண்டுகோள் விடுத்து வருகின்றனர். இந்த நிலையில் ரசிகர்களை குஷிப்படுத்த இந்த படத்தின் இசையமைப்பாளர் யுவன்ஷங்கர் ராஜா 'என்.ஜி.கே' குறித்த ஒரு தகவலை தனது சமூக வலைத்தளத்தில் பகிர்ந்துள்ளார்.

இந்த படத்தில் இடம்பெறும் பாடல் ஒன்றை இன்று பதிவு செய்ததாகவும், இந்த பாடலை ஸ்ரேயாகோஷல் மற்றும் சித்ஸ்ரீராம் இணைந்து பாடியுள்ளனர் என்றும் யுவன்ஷங்கர் ராஜா பதிவு செய்துள்ளார். இந்த தகவல் சூர்யா ரசிகர்களுக்கு உற்சாகத்தை தந்துள்ளது.

சூர்யா, ரகுல்ப்ரித்திசிங், சாய்பல்லவி உள்பட பலர் நடித்து வரும் இந்த படத்தை ட்ரிம் வாரியர் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்து வருகிறது. இந்த படத்திற்கு சிவகுமார் விஜயன் ஒளிப்பதிவும், ப்ரவீண் படத்தொகுப்பு பணியும் செய்து வருகின்றனர்.