இரவில் ஊதா கலருக்கு மாறும் வானம்… விசித்திர நிகழ்வில் ஒளிந்து இருக்கும் சுவாரசியம்!!!

  • IndiaGlitz, [Saturday,November 28 2020]

 

சுவீடன் நாட்டில் ஒரு தக்காளி பண்ணையின் உரிமையாளர் தன்னுடைய பண்ணையில் மின்சாரத்தை சேமிக்கும் வகையில் ஒரு புதிய திட்டத்தை அமல்படுத்தி இருக்கிறார். இதனால் அந்த நகரம் முழுவதுமே இரவு நேரத்தில் வானம் ஊதா கலருக்கு மாறி இருக்கிறது. இரவு நேரத்தில் எப்போதும் இருட்டாக இருக்கும் வானம் திடீரென்று ஊதா கலருக்கு மாறியதால் அந்நகர மக்கள் கடும் பீதி அடைந்ததாகக் கூறப்படுகிறது.

ட்ரேலிபோர்க் எனும் நகரத்தில் இருந்து 10 கி.மீ தொலைவில் அமைந்து இருக்கும் கிஸ்லோ எனும் பகுதியில் ஒருவர் தக்காளி பண்ணை வைத்திருக்கிறார். அந்தப் பண்ணையில் மின்சாரத்தை சேமிக்கும் பொருட்டு பெரிய எல்.ஈ.டி அமைப்பு பொருத்தப்பட்டு இருக்கிறது. இந்த அமைப்பு அளவில் பெரிதாக இருப்பதாகக் கூறப்படுகிறது. ஆற்றல் மிக்க அந்த லைட்டிங் அமைப்புகள் இரவு நேரத்தில் இருட்டாக இருக்கும் வானத்தை தனது ஒளிச்சிதறல் மூலமாக ஊதா கலருக்கு மாற்றி விடுகிறது.

ஆரம்பத்தில் இதை உணராத அந்த நகரத்து மக்கள் கடும் பீதி அடைந்து போலீஸ் உதவியை நாடிய சம்பவங்களும் அரங்கேறி இருக்கின்றன. இந்த லைட்டினிங் அமைப்பு ஒட்டுமொத்த நகரத்தையும் வியாபித்து தினம் தோறும் வானத்தை ஊதா கலருக்கு மாற்றி விடுகிறது. குழந்தைகள் இதை ரசித்தாலும் சிலர் பயந்து கொண்டு அலறுவதால் அதிகாலை 5-11 மணி வரை லைட்டினிங் அமைப்பு நிறுத்தி வைப்பதாக பண்ணை உரிமையாளர் உத்தரவாதம் கொடுத்து உள்ளார். எதிர்காலத்தில் இந்த குறைபாடு சரிசெய்யப்பட்டு ஒட்டுமொத்த பண்ணையிலும் மின்சாரம் சேமித்து வைக்கப்படும் எனவும் அவர் நம்பிக்கை தெரிவித்து உள்ளார்.

More News

பிக்பாஸ் எவிக்சனில் திடீர் திருப்பம்: தப்பித்தார் ரமேஷ், அப்ப சிக்கியது யார்?

பிக்பாஸ் நிகழ்ச்சியில் இன்று காலை வரை குறைந்த வாக்குகள் பெற்று இருந்தவர் ரமேஷ் தான் என்று அனைத்து ஊடகங்களிலும் செய்திகள் வெளிவந்து கொண்டிருந்த நிலையில் திடீர் திருப்பமாக

கொரோனா வைரஸ் முதலில் உருவாகியது இந்தியாவிலா??? பரபரப்பை கிளப்பும் விஞ்ஞானிகள்!!!

எந்த நாட்டில் இருந்து கொரோனா வைரஸ் உருவாகியது என்ற விவாதம் உலகம் முழுவதும் ஒரு மூன்றாம் உலகப் போரையே ஏற்படுத்தும் அளவிற்கு பெரும் சிக்கலாக நீடித்து வருகிறது.

கமல் சார் வச்சுருக்காரு சாட்டை: ஆரி சந்தோஷத்தை பார்த்தா, பாலாவுக்கு செம டோஸ் போல!

பிக் பாஸ் நிகழ்ச்சியில் இன்று கமல்ஹாசன் சாட்டையை கையில் எடுத்து ஒரு சில போட்டியாளர்கள் மீது வீச வேண்டும் என ஏராளமான பார்வையாளர்கள் வேண்டுகோள், கோரிக்கை விடுத்த

தமிழகத்தை நோக்கி இன்னொரு புயல்: எங்கே? எப்போது?

வங்க கடலில் உருவான நிவர் புயல் சமீபத்தில் தமிழகத்தை கரை கடந்து பெரும் சேதத்தை உருவாக்கி விட்டுச் சென்றுள்ளது. இந்த சேதத்தின் மதிப்பே இன்னும் கணக்கிடாத நிலையில் தற்போது

கடல் நிறத்தில் காஸ்ட்யூம்: சமந்தாவின் க்யூட் புகைப்படம் வைரல்!

தமிழ் தெலுங்கு திரையுலகின் முன்னணி நடிகையான சமந்தா தற்போது மாலத்தீவில் சுற்றுலாவுக்கு சென்றுள்ளார் என்பதும் மாலத்தீவில் இருந்து அவர் பதிவு செய்யும் புகைப்படங்களும் வீடியோக்களும்