close
Choose your channels

வருங்கால கணவருடன் தீபாவளி கொண்டாடிய விஜய்சேதுபதி பட நடிகை!

Monday, November 16, 2020 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

வருங்கால கணவருடன் தீபாவளி கொண்டாடிய விஜய்சேதுபதி பட நடிகை!

நடிகர் விஜய்சேதுபதி நடித்த ’ஒரு நல்ல நாள் பார்த்து சொல்றேன்’ என்ற படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானவர் நடிகை நிஹாரிகா. இவர் ஒரு சில தெலுங்கு படங்களில் நடித்தவர் மட்டுமின்றி ஒரு தயாரிப்பு நிறுவனத்தையும் நடத்தி ஒரு சில படங்களை தயாரித்து வருகிறார். மேலும் தெலுங்கு சூப்பர் ஸ்டார் சிரஞ்சீவியின் தம்பி நாகபாபுவின் மகள் தான் இவர் என்பது குறிப்பிடத்தக்கது 

இந்த நிலையில் நடிகை நிஹாரிகாவுக்கும் பொறியாளர் சைதன்யா என்பவருக்கும் கடந்த ஆகஸ்ட் மாதம் திருமணம் நிச்சயதார்த்தம் நடந்தது. ஐதராபாத்தில் உள்ள ஸ்டார் ஹோட்டல் ஒன்றில் நடந்த இந்த நிச்சயதார்த்தத்தில் சிரஞ்சீவி, ராம்சரண் தேஜா உள்பட அவரது குடும்பத்தினர் கலந்து கொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது

இந்த நிலையில் விரைவில் சைதன்யாவை திருமணம் செய்யவிருக்கும் நடிகை நிஹாரிகா, தனது வருங்கால கணவருடன் இணைந்து இந்த ஆண்டு தீபாவளியை கொண்டாடியுள்ளார். இந்த கொண்டாட்டத்தில் நிஹாரிகாவின் சகோதரரும் நடிகருமான வருண் தேஜூம் கலந்து கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது. இது குறித்த புகைப்படங்களை நிஹாகா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ள நிலையில் அந்த புகைப்படங்கள் தற்போது வைரலாகி வருகிறது

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.