கார்த்தி-ஜோதிகா படத்தில் இணைந்த இன்னொரு நாயகி!

  • IndiaGlitz, [Friday,May 17 2019]

நடிகர் கார்த்தியும் நடிகை ஜோதிகாவும் முதல்முறையாக இணைந்து நடிக்கும் திரைப்படம் ஒன்றை 'பாபநாசம்' இயக்குனர் ஜித்துஜோசப் இயக்கி வருகிறார் என்பதை ஏற்கனவே பார்த்தோம். ஜோதிகாவும் கார்த்தியும் அக்கா தம்பியாக நடித்து வரும் இந்த படத்தில் சத்யராஜ் இருவருக்கும் தந்தையாக நடித்து வருகிறார்.

இந்த படத்தின் படப்பிடிப்பு ஊட்டியில் விறுவிறுப்பாக நடந்து வரும் நிலையில் இந்த படத்தில் தற்போது நிகிலா விமல் என்ற நடிகை இணைந்துள்ளார். இவர் ஏறகனவே சசிகுமார் நடித்த 'கிடாரி', 'வெற்றிவேல்' உள்பட ஒருசில படங்களில் நடித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த தகவலை நடிகர் கார்த்தி தனது சமூக வலைத்தளத்தில் உறுதி செய்துள்ளார்.

குடும்ப செண்டிமெண்ட் கலந்த கதையம்சம் கொண்ட இந்த படத்திற்கு '96' புகழ் கோவிந்த் வசந்த் இசையமைத்து வருகிறார். மேலும் இந்த படத்திற்கு ஆர்.டி.ராஜசேகர் ஒளிப்பதிவு செய்து வருகிறார்.