'நிலவுக்கு என் மேல் என்னடி கோபம்' இந்த பிரபலம் இயக்க வேண்டிய படமா? வைரல் புகைப்படம்..!

  • IndiaGlitz, [Monday,December 25 2023]

தனுஷ் இயக்கும் மூன்றாவது திரைப்படத்தின் டைட்டில் ’நிலவுக்கு என் மேல் என்னடி கோபம்’ நேற்று வெளியானது என்பதும் இது குறித்த மோசன் வீடியோ வைரல் ஆனது என்பதையும் பார்த்தோம். ஆனால் இந்த படம் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பே இன்னொரு பிரபலம் இயக்க வேண்டிய படம் என்பது தற்போது தெரியவந்துள்ளது.

கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னர் கலைப்புலி எஸ். தாணு தயாரிப்பில் சௌந்தர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில் ’நிலவுக்கு என் மேல் என்னடி கோபம்’ என்ற படம் உருவாக இருப்பதாக அறிவிக்கப்பட்டது. இந்த படத்தில் நடிக்க விரும்புபவர்கள் தங்களுடைய விபரத்தை அனுப்பலாம் என்று சௌந்தர்யா ரஜினிகாந்த் சமூக வலைதளத்தில் தெரிவித்து இருந்தார்.

கடந்த 2016 ஆம் ஆண்டு சௌந்தர்யா ரஜினிகாந்த் இந்த அறிவிப்பை வெளியிட்ட நிலையில் அதன் பிறகு இந்த படம் ஒரு சில காரணங்களால் உருவாகவில்லை. இந்த நிலையில் தற்போது 8 ஆண்டுகள் கழித்து அதே டைட்டிலில் தனுஷ் இயக்கம் இருக்கும் படத்தின் அறிவிப்பு அதே டைட்டிலில் வெளியாகி உள்ளது.

செளந்தர்யா ரஜினிகாந்த் இயக்க இருந்த திரைப்படமும் தனுஷ் தற்போது இயக்கி வரும் திரைப்படமும் ஒரே கதையா? என்பது குறித்த தகவல் இல்லை என்றாலும் இந்த புகைப்படம் தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.

More News

10 வருடங்களுக்கு முன் நடித்த நடிகையிடம் மன்னிப்பு கேட்ட அஜித்.. விடாமுயற்சி' படப்பிடிப்பில் ஆச்சரியம்..!

தன்னுடன் 10 வருடங்களுக்கு முன் இணைந்து நடித்த நடிகையை அஜர்பைஜானில் சந்தித்த அஜித் அவரிடம் மன்னிப்பு கேட்ட வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

ஒரு நல்ல படம் எடுக்க இத்தனை லட்சம் போதும்.. மாயாவுக்கு கமல்ஹாசன் கூறிய அறிவுரை..!

பிக் பாஸை நிகழ்ச்சி நேற்று கமல்ஹாசன் எபிசோடு என்பதால் பார்வையாளர்கள் ஆர்வத்துடன் பார்த்து ரசித்தனர் என்பதும் குறிப்பாக சினிமா குறித்து அவர் பேசிய சில கருத்துக்கள்  இளம் தலைமுறை சினிமா

பிக்பாஸ் வீட்டிற்கு செல்லும் போது மாயாவுக்கு லோகேஷ் கனகராஜ் கொடுத்த வாக்குறுதி: என்ன தெரியுமா?

பிக் பாஸ் நிகழ்ச்சியின் போட்டியாளர்களில் ஒருவரான மாயாவை 80 நாட்களுக்கு மேலாகியும் சக போட்டியாளர்களும் சரி, பார்வையாளர்களும் சரி, சரியாக புரிந்து கொள்ள முடியவில்லை

ஒரு வாரத்திற்கு பின் மீண்டும் ஆரம்பித்தது சண்டை.. ஓப்பன் நாமினேஷனில் கடும் வாக்குவாதம்..!

பிக் பாஸ் சீசன் 7 நிகழ்ச்சியில் ஆரம்பத்தில் இருந்தே போட்டியாளர்கள் தங்களுக்குள் சண்டை சச்சரவு போட்டு வந்த நிலையில் கடந்த வாரம் மட்டும் சண்டை இல்லாமல் இருந்தது.

தனுஷ் இயக்கும் 3வது படத்தின் டைட்டில்.. பழைய பாடலின் கவிதை வரிகள்..!

தனுஷ் இயக்கத்தில் உருவாகும் மூன்றாவது படத்தின் படப்பிடிப்பு கடந்த சில நாட்களாக விறுவிறுப்பாக நடைபெற்று