close
Choose your channels

காஜல் அகர்வால் விரைவில் குழந்தை பெற்று கொள்ள வேண்டும்: வேண்டுகோள் விடுத்தது யார் தெரியுமா?

Saturday, June 19, 2021 • தமிழ் Comments

தமிழ், தெலுங்கு திரையுலகின் முன்னணி நடிகைகளில் ஒருவர் காஜல் அகர்வால் என்பதும், இவர் மும்பையை சேர்ந்த கௌதம் என்பவரை கடந்த சில மாதங்களுக்கு முன்னர் திருமணம் செய்து கொண்டார் என்பதும், திருமணத்திற்கு பின்னர் மாலத்தீவுக்கு தேனிலவு சென்ற நிலையில் தேனிலவு புகைப்படங்கள் அவரது இன்ஸ்டாகிராமில் மிகப்பெரிய அளவில் வைரலானது என்பதும் தெரிந்ததே

இந்த நிலையில் திருமணத்திற்கு பின்னரும் அவர் சிரஞ்சீவியின் ‘ஆச்சார்யா’ உள்ளிட்ட சில படங்களில் பிசியாக நடித்து வருகிறார். சமீபத்தில் காஜல் அகர்வால் நடிப்பில் வெளியான வெப்தொடர் ’லைவ் டெலிகாஸ்ட்’ மிகப்பெரிய வரவேற்பை பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் அவர் ‘ஹேய் சினாமிகா, இந்தியன் 2’, ‘ஆச்சார்யா’, ‘கோஸ்ட்டி’, ‘பாரீஸ் பாரிஸ்’, உள்பட ஒருசில படங்களில் நடித்து வருகிறார்

இந்த நிலையில் காஜல் அகர்வாலின் சகோதரியும், நடிகையுமான நிஷா அகர்வால் சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில் ’எனது மூன்று வயது மகனின் துணைக்காக காஜல் அகர்வால் சீக்கிரம் குழந்தை பெற்றுக்கொள்ள வேண்டும். இதனை நான் அவரிடம் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறேன். எனவே அவர் சீக்கிரம் குழந்தை பெற்றுக் கொள்வார் என்று நான் நம்புகிறேன்’ என்று தெரிவித்துள்ளார். காஜல் அகர்வாலின் சகோதரியான நிஷா அகர்வாலுக்கு கடந்த 2013ஆம் ஆண்டு திருமணம் நடந்தது என்பதும் அவருக்கு 3 வயதில் ஒரு மகன் இருக்கிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Get Breaking News Alerts From IndiaGlitz