close
Choose your channels

தனுஷின் 'D44' படத்தில் இணைந்த பிரபல நடிகை: சன் பிக்சர்ஸ் அறிவிப்பு

Wednesday, August 4, 2021 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

தனுஷ் நடிக்கவிருக்கும் 44வது படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்க உள்ளது என்பதும் இந்த படத்தை மித்ரன் ஜவஹர் இயக்க உள்ளார் என்பதையும் ஏற்கனவே பார்த்தோம். மேலும் இந்த படத்தின் முக்கிய வேடத்தில் இயக்குனர் இமயம் பாரதிராஜா நடிக்க இருப்பதாக அதிகாரப்பூர்வமாக சன் பிக்சர்ஸ் நிறுவனத்தால் இன்று காலை அறிவிக்கப்பட்டது என்பதும், அதனைத் தொடர்ந்து சில மணி நேரங்களில் மேலும் ஒரு முக்கிய கேரக்டரில் பிரகாஷ்ராஜ் நடிக்க இருப்பதாகவும் அறிவிக்கப்பட்டது

இந்த நிலையில் தற்போது ‘D44' படத்தில் நடிகை நித்யா மேனன் நடிக்க இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இவர் இந்த படத்தில் தனுஷுக்கு ஜோடியாக நடிக்கிறாரா? அல்லது வேறு முக்கிய கேரக்டரில் நடிக்கிறாரா? என்பதை பொறுத்திருந்துதான் பார்க்கவேண்டும். ஏற்கனவே ‘D44' படத்தில் பிரியா பவானி சங்கர் மற்றும் ராஷிகண்ணா ஆகிய இருவரும் நடிக்க உள்ளதாக கூறப்பட்டது. இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை சன் பிக்சர்ஸ் இன்றே வெளியிடுமா? என்பதையும் பொறுத்திருந்து பார்ப்போம்

நீண்ட இடைவேளைக்கு பின்னர் தனுஷ் படத்திற்கு அனிருத் இசையமைத்து உள்ளதை அடுத்து இந்த படத்தின் எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.


 

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.