தனுஷின் 'D44' படத்தில் இணைந்த பிரபல நடிகை: சன் பிக்சர்ஸ் அறிவிப்பு

தனுஷ் நடிக்கவிருக்கும் 44வது படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்க உள்ளது என்பதும் இந்த படத்தை மித்ரன் ஜவஹர் இயக்க உள்ளார் என்பதையும் ஏற்கனவே பார்த்தோம். மேலும் இந்த படத்தின் முக்கிய வேடத்தில் இயக்குனர் இமயம் பாரதிராஜா நடிக்க இருப்பதாக அதிகாரப்பூர்வமாக சன் பிக்சர்ஸ் நிறுவனத்தால் இன்று காலை அறிவிக்கப்பட்டது என்பதும், அதனைத் தொடர்ந்து சில மணி நேரங்களில் மேலும் ஒரு முக்கிய கேரக்டரில் பிரகாஷ்ராஜ் நடிக்க இருப்பதாகவும் அறிவிக்கப்பட்டது

இந்த நிலையில் தற்போது ‘D44' படத்தில் நடிகை நித்யா மேனன் நடிக்க இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இவர் இந்த படத்தில் தனுஷுக்கு ஜோடியாக நடிக்கிறாரா? அல்லது வேறு முக்கிய கேரக்டரில் நடிக்கிறாரா? என்பதை பொறுத்திருந்துதான் பார்க்கவேண்டும். ஏற்கனவே ‘D44' படத்தில் பிரியா பவானி சங்கர் மற்றும் ராஷிகண்ணா ஆகிய இருவரும் நடிக்க உள்ளதாக கூறப்பட்டது. இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை சன் பிக்சர்ஸ் இன்றே வெளியிடுமா? என்பதையும் பொறுத்திருந்து பார்ப்போம்

நீண்ட இடைவேளைக்கு பின்னர் தனுஷ் படத்திற்கு அனிருத் இசையமைத்து உள்ளதை அடுத்து இந்த படத்தின் எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.


 

More News

பொன்னியின் செல்வன் லுக்கில் அசத்தும் நடிகர்கள்....! இணையத்தையே அலறவிடும் புகைப்படங்கள்...!

பொன்னியின் செல்வன் திரைப்படத்தில் நடிக்கும், காதாபாத்திரங்களின் புகைப்படங்கள் இணையத்தில் அதிகமாக வைரலாகி வருகின்றன.

குளிர்பானம் குடித்த 13 வயது சிறுமி உயிரிழப்பு… பதைக்க வைக்கும் தகவல்!

சென்னை, பெசண்ட் நகர் பகுதியில் வசித்த 13 வயது சிறுமி ஒருவர் மளிகை கடையில் இருந்து

போட்டிக்கு நடுவே தடுக்கி விழுந்தும், தங்கம் வென்ற தங்கமங்கை… குவியும் வாழ்த்து!

2021 டோக்கியோ ஒலிம்பிக் போட்டிகள் தற்போது ஜப்பான் நாட்டில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

நீங்கள் Emotional eater ஆ? உடல்எடை பிரச்சனைக்கு தமிழ் நடிகையின் எளிய டிப்ஸ்!

தல அஜித் நடித்த “அசல்”, நடிகர் சூர்யா நடித்த “வாரணம் ஆயிரம்”, “நடுநிசி நாய்கள்”, “வெடி”,

தளபதி விஜய்யின் 'பீஸ்ட்' படப்பிடிப்பில் இணைந்த பிரபல மலையாள நடிகர்!

தளபதி விஜய் நடித்து வரும் 'பீஸ்ட்' படத்தின் படப்பிடிப்பு கடந்த சில மாதங்களாக நடைபெற்று வருகிறது என்பதை பார்த்து வருகிறோம். இந்த படத்தின் முதல் கட்ட படப்பிடிப்பு ஜார்ஜியாவில்