திருமண உடை, லிப்கிஸ்: நித்யா மேனனின் வைரல் வீடியோ!

  • IndiaGlitz, [Saturday,April 24 2021]

’180’ என்ற தமிழ் திரைப்படத்தில் அறிமுகமாகி அதன் பின்னர் ’வெப்பம்’ ’காஞ்சனா 2’ விஜய்யின் ’மெர்சல்’ சூர்யாவின் ’24’ உள்பட பல திரைப்படங்களில் நடித்தவர் நடிகை நித்யா மேனன்.

சமூக வலைதளங்களில் எப்போதும் ஆக்டிவ்வாக இருக்கும் நித்யா மேனன், அவ்வப்போது தனது கிளாமரான மற்றும் அழகிய புகைப்படங்களை பதிவு செய்து ஃபாலோயர்களின் லைக்ஸ்களை பெற்று வருவார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் சமீபத்தில் அவர் தனது இன்ஸ்டாவில் பதிவு செய்த புகைப்படங்கள் மற்றும் வீடியோ மிகப்பெரிய அளவில் இணையத்தில் வைரலாகி வருகிறது. திருமணத்தின் போது அணியும் வெள்ளை உடையுடன் அவர் எடுத்துள்ள இந்த போட்டோஷூட்டில் குழந்தை ஒன்றுக்கு லிப்கிஸ் கொடுப்பது போன்று உள்ளது. இந்த புகைப்படங்கள் மற்றும் வீடியோவுக்கு ஏராளமான லைக்ஸ்களும் கமெண்ட்ஸ்களும் குவிந்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

நடிகை நித்யா மேனன் தற்போது இரண்டு தெலுங்கு படங்களிலும் இரண்டு மலையாள படங்களிலும் நடித்து வருகிறார் என்பதும் தமிழில் ஒரு படத்தில் நடிக்க பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

More News

பிக்பாஸ் சம்யுக்தாவுக்கு இந்த கேரக்டரா? டிவி சீரியல் ரசிகர்கள் அதிர்ச்சி!

பிக்பாஸ் சீசன் 4 நிகழ்ச்சியின் போட்டியாளர்களில் ஒருவர் சம்யுக்தா என்பதும் இவர் ஆரியுடன் ஏற்பட்ட மோதல் காரணமாக ரசிகர்களின் ஆதரவை இழந்து 56வது நாளிலேயே வெளியேற்றப்பட்டார் என்பது தெரிந்ததே 

'மாஸ்டர்' புதிய சாதனைக்கு உதவிய சாண்டி மாஸ்டர், ரோபோ சங்கர், வேதிகா ....

தளபதி விஜய் நடித்த 'மாஸ்டர்' திரைப்படம் ஏற்கனவே மிகப்பெரிய வசூல் உள்பட பல்வேறு சாதனைகள் செய்து உள்ள நிலையில் தற்போது புதிதாக இன்னொரு சாதனையையும் செய்துள்ளது 

ஊரடங்கில் காதலியை பார்க்க அனுமதி கேட்ட இளைஞர்: காவல்துறையின் அதிரடி பதில்!

ஊரடங்கில் தனது காதலியை பார்க்க வெளியே செல்ல வேண்டும் என்றும் அதற்கு என்ன ஸ்டிக்கர் நான் ஒட்டிக் கொண்டு செல்ல வேண்டும் என்றும் இளைஞர் ஒருவர் கேட்ட கேள்விக்கு மும்பை போலீஸ்

காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்த அண்ணனை கூலிப்படையை ஏவி கொலை செய்த பிரபல நடிகை!

காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்ததால் சொந்த அண்ணனையே கூலிப்படையை ஏவி கொலை செய்த பிரபல நடிகை ஒருவரால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது 

தமிழகத்திலும் வெள்ளி முதல் திங்கள் வரை முழு ஊரடங்கா?

தமிழகத்தின் அண்டை மாநிலமான புதுவையிலும் வேறு சில மாநிலங்களிலும் வெள்ளி இரவு முதல் திங்கள் அதிகாலை வரை முழு ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது