என்னுடைய ஒரே ரொமான்ஸை தடுத்துவிட்டார்கள்: வீடியோவில் அழுத நித்யானந்தா

பாலியல் குற்றச்சாட்டில் சிக்கி தலைமறைவாகி போலீசாரால் தேடப்பட்டு வரும் நித்தியானந்தா, அவ்வப்போது வீடியோக்களை இணையதளங்களில் வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தி வரும் நிலையில் தற்போதும் ஒரு வீடியோவை வெளியிட்டுள்ளார். இந்த வீடியோவில் அவர் அழுது கொண்டே கூறியதாவது:

என்னை ஏமாளியாகவோ கோமாளியாகவோ என்ன வேண்டும் என்றாலும் நினைத்துக் கொள்ளுங்கள். பரமசிவன் என்னை காப்பாற்றி விட்டார். காலபைரவர் என்னை காப்பாற்றி விட்டார். நான் பாதுகாப்பாக இருக்கின்றேன். நான் சிவனின் சத்தியத்தை சொல்லிக்கிட்டே இருப்பேன். யாரெல்லாம் என்னுடைய அறிவுரையை கேட்கின்றார்களோ கேட்டுக்கொள்ளுங்கள். விழித்து கொள்பவர்கள் விழித்துக் கொள்ளுங்கள்.

நான் வெளியிடும் இந்த ஒரு வீடியோவிற்காக என்னை நிறைய பேர் தாக்குவார்கள் என்று எனக்கு தெரியும். அதைப்பற்றி நான் கவலைப்படவில்லை. எனக்கு சூடு சொரணை இல்லை, நோ சூடு நோ சொரணை.

நான் சிவனின் பாதுகாப்பில் இருப்பதால் தான் பலமுறை கொலை முயற்சி செய்தும் நான் உயிரோடு இருக்கின்றேன். பரமசிவன் பெயரும் இந்து சமூகமும் உயிரோடு இருப்பதற்காக நான் நீண்ட காலம் உயிர் வாழ்வேன். என் வாழ்க்கையில் இருக்கும் ஒரே ரொமான்ஸ் என்னவென்றால் அண்ணாமலையார் கோவிலுக்கும், மீனாட்சி அம்மன் கோவிலுக்கும் செல்வதுதான். அண்ணாமலையாரையும் மீனாட்சி சொக்கநாதரையும் விழுந்து விழுந்து கும்பிடுவேன். அந்த ஒன்றை தான் உங்களால் இப்போது தடுக்க முடிந்துள்ளது.

நான் இறந்துவிட்டாலும் சிவனின் பெருமையைக் கூற ஒரு பரம்பரையை உருவாக்கிவிட்டு தான் செல்வேன். அந்தப் பரம்பரை சிவனின் புகழை எப்போதும் பரப்பிக் கொண்டே இருக்கும். என் குருநாதர் ஞானசம்பந்தன் விட்டுச் சென்ற பணியை நான் உயிருடன் இருக்கும் வரை நிறைவேற்றுவேன் என்று அழுதுகொண்டே நித்யானந்தா கூறியுள்ளார்.

More News

தமிழ் திரைப்பட நடிகையிடம் மன்னிப்பு கேட்ட ஏர் இந்தியா நிர்வாகம்!

தமிழ் திரைப்பட நடிகை ஒருவரிடம் ஏர் இந்தியா நிர்வாகம் மன்னிப்பு கேட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது 

அடப்பாவி, உன்னை போயி போராளின்னு நினைச்சேனே! கஸ்தூரி டுவீட்

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்கள் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலை போராட்டத்தின்போது துப்பாக்கி சூட்டில் பாதிக்கப்பட்ட மக்களை சந்தித்து ஆறுதல் கூற சென்றிருந்தபோது

அச்சமூட்டும் கொல்லிமலையும் அதன் ஆன்மீக வரலாறும்

கொல்லிமலை என்று சொன்னாலே நம்மையும் அறியாமல் ஒரு அச்சம் உள்ளூறத் தொற்றி கொள்வது இயல்புதான்.

ரஜினியை முதல்முறையாக பார்த்த தருணம்: கார்த்திக் நரேன் 

கார்த்திக் நரேன் இயக்கத்தில் அருண் விஜய், பிரசன்னா, பிரியா பவானி சங்கர் நடிப்பில் நேற்று வெளியான 'மாஃபியா' திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்று திரையரங்குகளில் ஓடி வருகிறது 

இந்த படம் சென்சாரில் எப்படி தப்பியது? த்ரிஷா படம் குறித்து கே.பாக்யராஜ் ஆச்சரியம்

நடிகை த்ரிஷா நடித்த படம் ஒன்று சென்சாரில் எப்படி தப்பியது என்பதே தனக்கு ஆச்சரியமாக இருப்பதாக கே பாக்யராஜ் தெரிவித்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது