விஜய்சேதுபதியின் அடுத்த படத்தில் இரண்டு முன்னணி நடிகைகள்
Send us your feedback to audioarticles@vaarta.com
மக்கள் செல்வன் விஜய்சேதுபதிக்கு கடந்த ஆண்டு ஒரு சிறப்பான ஆண்டாக அமைந்தது. அவர் நடித்த 'இமைக்கா நொடிகள்', 'செக்க சிவந்த வானம்' சீதக்காதி' மற்றும் '96' ஆகிய திரைப்படங்கள் ரசிகர்களின் நல்ல வரவேற்பை மட்டுமின்றி வசூல் மழையும் பொழிந்தன.
இந்த நிலையில் தற்போது விஜய்சேதுபதி, இயக்குனர் சீனுராமசாமி இயக்கி வரும் 'மாமனிதன்' மற்றும் அருண்குமார் இயக்கத்தில் 'சிந்துபாத்' ஆகிய படங்களில் நடித்து முடித்துவிட்டு அடுத்ததாக 'வாலு' இயக்குனர் விஜய்சந்தர் இயக்கும் படத்தில் நடிக்கவுள்ளார். இந்த படத்தின் ஆரம்பகட்ட பணிகள் நடைபெற்று வருகிறது.
இந்த நிலையில் இந்த படத்தின் நாயகிகளாக நிவேதா பேத்ராஜ் மற்றும் ராஷிகண்ணா ஆகிய இருவரும் நடிக்கவுள்ளதாக செய்திகள் வெளிவந்துள்ளது. மேலும் இந்த படத்தில் சமீபத்தில் சூரி இணைந்தார் என்பதை ஏற்கனவே பார்த்தோம். விரைவில் படப்பிடிப்பு தொடங்கவுள்ள இந்த படத்தை விஜயா புரடொக்சன்ஸ் நிறுவனம் தயாரிக்கவுள்ளது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout