நிவேதா பெத்துராஜ் இத்தனை கிமீ வேகத்தில் கார் ஓட்டுகிறாரா?

  • IndiaGlitz, [Thursday,July 15 2021]

ஒரு நாள் கூத்து, டிக் டிக் டிக், சங்கத்தமிழன் உள்பட ஒரு சில தமிழ் திரைப்படங்களில் நடித்த நடிகை நிவேதா பெத்துராஜ், சமீபத்தில் பார்முலா ஒன் கார் ரேஸ் பயிற்சியில் ஈடுபட்ட புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் வைரலானது என்பது தெரிந்ததே. தற்போது கார் ரேசில் முதல்கட்ட பயிற்சி முடித்துள்ள நிவேதா பெத்துராஜ் அடுத்ததாக கார் ரேஸில் கலந்து கொள்ளும் முயற்சியில் தீவிரமாக இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் தனது சமூக வலைத்தளத்தில் ரசிகர்கள் கேட்ட கேள்விகளுக்கு பதிலளித்த நிவேதா பெத்துராஜ் தான் எத்தனை கிலோமீட்டர் வேகத்தில் கார் ஓட்டுவேன் என்பதை தெரிவித்துள்ளார். பொதுவாக கார் ரேஸ் டிராக்கில் 160 கிலோமீட்டர் வேகத்தில் கார் ஓட்டியுள்ளதாகவும், ஆனால் தனது டாட்ஜ் காரில் 220 கிலோமீட்டர் வேகம் வரை ஓட்டிய அனுபவம் தனக்கு உண்டு என்று கூறியுள்ளார்.

மணிக்கு 220 கிலோ மீட்டர் வேகத்தில் நிவேதா பெத்துராஜ் கார் ஓட்டி உள்ளார் என்ற தகவல் ரசிகர்களுக்கு பெரும் ஆச்சரியத்தை அளித்துள்ளது. தற்போது கார் ரேசிங்கிற்கான லெவல்-1 பயிற்சியை முடித்து விட்டதாகவும் இதுதான் ஆரம்ப ஸ்டேஜ் என்றும், இன்னும் அதிக பயிற்சிகளில் ஈடுபட இருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

நிவேதா பெத்துராஜ் தற்போது ’பொன்மாணிக்கவேல்’ ’பார்ட்டி’ ஆகிய படங்களில் நடித்து முடித்துள்ளார் என்பதும் அந்த படங்கள் விரைவில் வெளியாக உள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.

More News

ஸ்ரீதேவி விஜயகுமாருக்கு இவ்வளவு பெரிய மகளா? வைரலாகும் போட்டோஷூட் புகைப்படங்கள்!

தமிழ் நடிகை ஸ்ரீதேவி விஜயகுமார் தனது சமூக வலைதளப் பக்கத்தில் மகளுடன் எடுத்த போட்டோ ஷூட் புகைப்படங்களை பதிவு செய்துள்ள நிலையில் இந்த புகைப்படங்கள் தற்போது வைரல் ஆகி வருகின்றன

வெற்றிமாறன் - ராகவா லாரன்ஸ் படத்தின் சூப்பர் அப்டேட்!

பிரபல இயக்குனர் வெற்றிமாறன் மற்றும் பிரபல நடிகர், நடன இயக்குனர், இயக்குனர் ராகவா லாரன்ஸ் ஆகிய இருவரும் இணையும் படம் குறித்த அறிவிப்பு சமீபத்தில் அதிகாரபூர்வமாக வெளி வந்தது

இந்தியில் திரைப்படமாகிறது சவுரவ் கங்குலி வாழ்க்கை… நடிகர் யார் தெரியுமா?

இந்தியக் கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனும் தற்போதைய பிசிசிஐயின் தலைவருமான சவுரவ் கங்குலி தனது வாழ்க்கை வரலாற்றை திரைப்படமாக எடுப்பதற்கு ஒப்புதல் அளித்து இருப்பதாகத் தகவல் வெளியாகி இருக்கிறது.

நாளை உலகமே இவர்கள் புகழ் பாடும்: கமல்ஹாசன் டுவிட்

ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் ஒலிம்பிக் போட்டி வரும் 23ஆம் தேதி தொடங்க உள்ளது என்பதும் இந்த போட்டி ஆகஸ்ட் 8ஆம் தேதி வரை நடைபெற உள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது

'வெல்டன் அண்ணாத்த': ரஜினியின் அரசியல் முடிவுக்கு வாழ்த்து தெரிவித்த பிரபல தயாரிப்பாளர்!

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்கள் சமீபத்தில் ரஜினி மக்கள் மன்றத்தை கலைத்து விடுவதாகவும் இனிமேல் அரசியலுக்கு வரும் எண்ணம் இல்லை என்று கூறியதற்கு பிரபல தயாரிப்பாளர் ஒருவர் வாழ்த்து தெரிவித்துள்ளார்