close
Choose your channels

நிவேதா பெத்துராஜ் டிராமா போட்ட 'பருவு' வெப் தொடர்.. டிரைலரே பயங்கரமா இருக்குதே..!

Friday, June 7, 2024 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

கடந்த சில நாட்களுக்கு முன் நடிகை நிவேதா பெத்துராஜ் காவல்துறை அதிகாரியிடம் வாக்குவாதம் செய்வது போன்ற ஒரு வீடியோ இணையத்தில் வைரலான நிலையில் அதன் பிறகு இரண்டு நாட்கள் கழித்து அந்த வீடியோ அவர் நடித்து வரும் ‘பருவு’ என்ற வெப் தொடரின் படப்பிடிப்பு என்பது தெரிய வந்தது. இந்த நிலையில் ‘பருவு’ வெப் தொடரின் ட்ரைலர் வெளியாகி உள்ள நிலையில் அந்த ட்ரெய்லர் தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.

தமிழ், தெலுங்கு ஆகிய இரண்டு மொழிகளில் ஜி5 சேனலில் வெளியாக இருக்கும் இந்த தொடரில் உள்ள டிரைலரை பார்க்கும் போது ஜாதி மாறி திருமணம் செய்து கொண்ட ஜோடியை பழி வாங்கும் ஒரு குரூப்பின் செயல் என்பது தெரிய வருகிறது

சாதி பிரச்சனை, ஆணவ கொலை ஆகியவற்றை மையமாக வைத்து உருவாக்கப்பட்டுள்ள இந்த வெப் தொடர் நிவேதா பெத்துராஜுக்கு வெற்றியை கொடுக்குமா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம் . ‘பருவு’ வெப் தொடர் ஜூன் 14ஆம் தேதி ஜீ5 ஓடிடியில் வெளியாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது

நரேஷ், நிவேதா பெத்துராஜ், நாகபாபு, ரமேஷ், ப்ரணிதா, உள்ளிட்ட பலர் நடித்த இந்த வெப்தொடரை சித்தார்த் நாயுடு மற்றும் ராஜசேகர் இயக்கியுள்ளனர். ஷரவன் பரத்வாஸ் இசையில் இந்த தொடர் உருவாகியுள்ளது,

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.   

Comments

Login to post comment
Cancel
Comment