பெரும் சதிகளுக்கு பின்னால், மறுக்கப்படும் காதல் கதை 'பருவு': ZEE5 தளத்தில் ஒரு த்ரில் தொடர் !!


Send us your feedback to audioarticles@vaarta.com


ZEE5 ஒரிஜினல் தெலுங்கு சீரிஸான "பருவு" தற்போது ZEE5 இல் ஸ்ட்ரீமாகிறது. மேலும் இந்த சீரிஸ் தமிழ் மொழியிலும் ஸ்ட்ரீமாகிறது.
சித்தார்த் நாயுடு மற்றும் வட்லபதி ராஜசேகர் ஆகியோர் இயக்கியுள்ளனர். இந்த சீரிஸை, சுஷ்மிதா கொனிடேலா தயாரித்துள்ளார். பவன் சதினேனி ஷோ ரன்னராக பணியாற்றியுள்ளார். பருவு சீரிஸில் நிவேதா பெத்துராஜ், நரேஷ் அகஸ்தியா, நாகபாபு மற்றும் பிரனீதா பட்நாயக் ஆகியோர் நடித்துள்ளனர்.
மிகவும் எதிர்பார்க்கப்பட்ட ZEE5 ஒரிஜினல் தெலுங்கு க்ரைம் த்ரில்லர் சீரிஸான "பருவு" சீரிஸில் ஷோ ரன்னராக பவன் சதினேனி பணியாற்ற, நம்பிக்கைக்குரிய அறிமுக இயக்குநர்களான சித்தார்த் நாயுடு மற்றும் வட்லபதி ராஜசேகர் ஆகியோர் இந்த சீரிஸை இயக்கியுள்ளனர்.
சுஷ்மிதா கொனிடேலா தயாரித்துள்ள இந்த சீரிஸை, தலைசிறந்த எழுத்தாளர் சித்தார்த் நாயுடு எழுதியுள்ளார். இந்த பரபரப்பான திரில்லர் சீரிஸில் நிவேதா பெத்துராஜ், நரேஷ் அகஸ்தியா, நாகபாபு மற்றும் பிரனீதா பட்நாயக் ஆகியோர் நடித்துள்ளனர்.
கெளரவ கொலைகளுக்கு பலியாகி விடுமோ என்ற அச்சத்தில், ஒரு தம்பதியினர் தங்களையும் தங்கள் காதலையும் காத்துக் கொள்ளப் போராடுகிறார்கள், சதிகளைத் தாண்டி அவர்கள் வெற்றி பெறுவார்களா, அல்லது சாதி வேறுபாடுகள் அவர்களைப் பிரிக்குமா? பாரம்பரியத்தைக் கடக்கும் உலகில், குடும்பங்கள் தங்கள் ஜாதியைக் காப்பாற்ற முனைந்தால் என்னவாகும் என்பது தான் இந்த சீரிஸின் கதை .
ZEE5 இல் "பருவு" பிரத்தியேகமாக தெலுங்கு மற்றும் தமிழ் ஆகிய இரு மொழிகளில் ஸ்ட்ரீமாகிறது. அன்பு, விசுவாசம் மற்றும் மரியாதையைப் பாதுகாக்க ஒருவர் எவ்வளவு தூரத்துக்குச் செல்வார்கள் என்பதைப் பற்றியும், மனிதர்களின் தெரியாத பக்கங்களை இந்த சீரிஸ் வெளிச்சமிட்டுக் காட்டும். ZEE5 இல் முதல் எபிஸோடை இலவசமாகப் பாருங்கள்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout

-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com