close
Choose your channels

கார்த்தியின் அடுத்த படத்தில் 'டிக் டிக் டிக் 'நாயகி

Wednesday, July 4, 2018 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

கார்த்தி நடித்து முடித்துள்ள 'கடைக்குட்டி சிங்கம்' திரைப்படம் விரைவில் ரிலீஸ் ஆகவுள்ள நிலையில் அவர் அடுத்ததாக 'இரும்புத்திரை' இயக்குனர் பி.எஸ்.மித்ரன் இயக்கத்தில் உருவாகும் படத்தில் நடிக்கவுள்ளார். இந்த படமும் 'இரும்புத்திரை' போன்றே டிஜிட்டல் உலகின் இன்னொரு பக்கத்தை வித்தியாசமான கோணத்தில் விவரிக்கவுள்ளது.

இந்த நிலையில் இந்த படத்தில் கார்த்தி ஜோடியாக நடிக்க நிவேதா பெத்ராஜ் ஒப்பந்தமாகியுள்ளார். இவர் சமீபத்தில் வெளிவந்து வெற்றி பெற்ற 'டிக் டிக் டிக்' படத்தின் நாயகி என்பது குறிப்பிடத்தக்கது

மேலும் இந்த படத்தில் இன்னொரு நாயகி நடிக்கவுள்ளதாகவும், கீர்த்திசுரேஷ் அல்லது சாயிஷா ஆகிய இருவரில் ஒருவர் நடிக்க வாய்ப்பு இருப்பதாகவும் கூறப்படுகிறது. இந்த படம் குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு விரைவில் வெளிவரவுள்ளது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.