close
Choose your channels

காதலில் விழுந்து விட்டாரா நடிகை நிவேதா தாமஸ்? வாழ்த்துக்களை குவிக்கும் ரசிகர்கள்..!

Monday, June 24, 2024 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

நடிகை நிவேதா தாமஸ் தான் காதலில் விழுந்து விட்டது போன்ற மறைமுகமாக பதிவை தனது சமூக வலைத்தளத்தில் செய்துள்ளதை அடுத்து ரசிகர்கள் அவருக்கு வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

ரஜினிகாந்த் நடித்த ’தர்பார்’, கமல்ஹாசன் நடித்த ’பாபநாசம்’, விஜய் நடித்த ’ஜில்லா’, ஜெய் நடித்த ‘நவீன சரஸ்வதி சபதம்’ உள்பட ஒரு சில தமிழ் படங்களிலும் பல மலையாள படங்களிலும் நடித்தவர் நடிகை நிவேதா தாமஸ்.

28 வயதாகும் நிவேதா தாமஸ் தனது சமூக வலைதள பக்கத்தில் தான் காதலில் விழுந்து விட்டதாக மறைமுகமான வார்த்தைகளை பதிவு செய்து லவ் எமோஜியையும் பதிவு செய்துள்ளார். இதையடுத்து அவருக்கு விரைவில் நிச்சயதார்த்தம் நடைபெறும் என்றும் திருமணம் நடைபெறும் என்றும் ரசிகர்கள் கருத்து தெரிவித்து வாழ்த்துக்களையும் தெரிவித்து வருகின்றனர்.

இந்த நிலையில் விரைவில் நிவேதா தாமஸ் தனது நிச்சயதார்த்தம், திருமணம் குறித்த அறிவிப்பை வெளியிடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

 

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.   

Comments

Welcome to IndiaGlitz comments! Please keep conversations courteous and relevant to the topic. To ensure productive and respectful discussions, you may see comments from our Community Managers, marked with an "IndiaGlitz Staff" label. For more details, refer to our community guidelines.
settings
Login to post comment
Cancel
Comment