'இரும்புத்திரை'யில் ஆதார் ஆபத்து குறித்த காட்சிகளா? இயக்குனர் மித்ரன் விளக்கம்

  • IndiaGlitz, [Wednesday,May 09 2018]

விஷால், சமந்தா, அர்ஜூன் நடிப்பில் பி.எஸ்.மித்ரன் இயக்கிய 'இரும்புத்திரை' திரைப்படம் வரும் வெள்ளி அன்று வெளியாகவுள்ள நிலையில் இந்த படத்தின் முதல் பாதி மட்டும் இன்று பத்திரிகையாளர்களுக்காக திரையிடப்பட்டது. முதல் பாதி காட்சிகள் முடிந்ததும் இந்த படம் குறித்து இயக்குனர் மித்ரன் பத்திரிகையாளர்களிடம் கூறியதாவது:

எப்போதும் புதுமையை விரும்புபவர் விஷால் சார். அவர் தன்னுடைய ஏதாவது ஒரு படத்தின் முதல் பாதியை செய்தியாளர்களுக்கு திரையிட்டு கருத்து கேட்க வேண்டும் என்று நினைத்து வந்தார். அது  இரும்புத்திரை படத்துக்கு நடந்துள்ளது. காரணம் இரும்புத்திரைக்கு படத்துக்கு அது சரியாக இருக்கும் என்பதால் தான். இரும்புத்திரை திரைப்படத்தின் இண்டர்வல் ப்ளாக் சரியான ஒன்றாக இருக்கும். இரும்புத்திரை ஆதாரினால் ஏற்ப்படும் ஆபத்தை பற்றி பேசும் படம் அல்ல, டிஜிட்டல் இந்தியாவின் இன்னொரு முகத்தை காட்டும் படமாக இருக்கும் என்று கூறினார்.

இந்த பத்திரிகையாளர் சந்திப்பில் இயக்குநர் மித்ரன் , லைகா குழுமத்தை சேர்ந்த கருணா , அயுப் கான் , எடிட்டர் ரூபன் ஆகியோர் கலந்துகொண்டனர். ஹாலிவுடில் திரையிடுவது போல இந்தியாவிலேயே முதன் முறையாக விஷாலின் “ இரும்புத்திரை “ திரைப்படத்தின் முதல் பாதி மட்டும் இன்று செய்தியாளர்களுக்கு திரையிடப்பட்டது திரையிடப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

More News

ரஜினியிடம் ஆயிரம் குறைகள் இருக்கலாம், ஆனால் உண்மை இருக்கு: வைகோ

ரஜினிகாந்த் வெகுவிரைவில் அரசியல் கட்சி ஆரம்பித்து அரசியல் களத்தில் குதிக்கவுள்ளார். அவருடைய அரசியல் அறிவிப்பு இன்று நடைபெறும் 'காலா' இசை வெளியீட்டு விழாவில் கூட இருக்கலாம் என்று கூறப்படுகிறது.

விசுவாசம்' படத்தில் பிரபல காமெடி நடிகர்: இணையத்தில் வைரலாகும் புகைப்படம்

'விசுவாசம்' படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் தொடங்கியது என்பதும் இந்த படத்தின் படப்பிடிப்பில் அஜித், நயன்தாரா உள்பட அனைவரும் கலந்து கொண்டு விறுவிறுப்பாக படப்பிடிப்பை நடத்தி வருகின்றனர்

இரும்புத்திரை' தடை வழக்கு: சென்னை ஐகோர்ட் அதிரடி உத்தரவு

விஷால், சமந்தா நடிப்பில் இயக்குனர் பி.எஸ்.மித்ரன் இயக்கிய 'இரும்புத்திரை' திரைப்படம் வரும் வெள்ளியன்று வெளியாகவுள்ள நிலையில்

ஒரு விஜய் ரசிகையின் நெகிழ்ச்சியான பதிவு

தளபதி விஜய் சமீபத்தில் சென்னையில் ரசிகர்களை சந்தித்து புகைப்படம் எடுத்து கொண்டார் என்ற செய்தியை ஏற்கனவே பார்த்தோம்.

இதுதான் அடல்ட் காமெடியா? கொந்தளித்த பிரபல நடிகை

கவுதம் கார்த்திக்கின் 'இருட்டு அறையில் முரட்டு குத்து' திரைப்படம் வசூல் அளவில் மிகப்பெரிய வெற்றி என்றாலும் இந்த படத்திற்கு திரையுலகினர்களே கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்