நடிகர் சூர்யா மீது நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கையா? தலைமை நீதிபதி தகவல்

  • IndiaGlitz, [Friday,September 18 2020]

நடிகர் சூர்யா தனது டுவிட்டர் பக்கத்தில் நீட் தேர்வு குறித்து காரசாரமான ஒரு அறிக்கையை வெளியிட்டார் என்பது தெரிந்ததே. இந்த அறிக்கை தமிழகம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் உயர் நீதிமன்ற நீதிபதி ஒருவர் சூர்யாவின் அறிக்கையில் நீதிமன்றம் மற்றும் நீதிபதிகள் குறித்து சர்ச்சைக்குரிய கருத்து இருப்பதாகவும் இதனை அடுத்து அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் தலைமை நீதிபதிக்கு கடிதம் எழுதி இருந்தார்.

ஆனால் அதே நேரத்தில் சூர்யா மீது நடவடிக்கை எடுக்க வேண்டிய அவசியம் இல்லை என்று ஆறு ஓய்வு பெற்ற நீதிபதிகள் அதே தலைமை நீதிபதிக்கு கடிதம் எழுதி இருந்தார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி சூர்யாவின் மீது நடவடிக்கை எடுப்பது குறித்து என்ன முடிவு எடுக்கப் போகிறார்? என்பதை அறிய அனைவரும் காத்திருந்தனர்.

இந்த நிலையில் நடிகர் சூர்யா மீது நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை இல்லை என்று சற்று முன்னர் சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி அமர்வு அறிவித்துள்ளது. இதனை அடுத்து இந்த பிரச்சனை தற்போது முடிவுக்கு வந்துள்ளதாக கருதப்படுகிறது.