பயிற்சியாளர் இன்னும் தேர்வு செய்யப்படவில்லை: பிசிசிஐ அறிவிப்பு

  • IndiaGlitz, [Tuesday,July 11 2017]

இந்திய கிரிக்கெட் அணியின் பயிற்சியாளர் பதவியில் இருந்து அனில் கும்ப்ளே விலகியவுடன் அடுத்த பயிற்சியாளரை தேர்வு செய்ய நேற்று சச்சின் தெண்டுல்கர், சவுரவ் கங்குலி மற்றும் விவிஎஸ் லட்சுமணன் ஆகியோர் கொண்ட குழு நேர்காணல் நடத்தியது.
இந்த நேர்காணலில் ரவிசாஸ்திரி, சேவாக் உள்பட ஐந்து பேர் கலந்து கொண்டனர். இந்நிலையில் இந்திய கிரிக்கெட் அணியின் பயிற்சியாளராக ரவிசாஸ்திரி தேர்வு செய்யப்பட்டுவிட்டதாக ஊடகங்களில் செய்தி வெளியானது. இந்த செய்திக்கு பிசிசிஐ தற்போது மறுப்பு தெரிவித்துள்ளது.
இதுகுறித்து பிசிசிஐ செயலாளர் அமிதாப் சவுத்ரி செய்தியாளர்களிடம் கூறியபோது, 'புதிய பயிற்சியாளர் குறித்து 3 பேர் கொண்ட கிரிக்கெட் ஆலோசனைக் குழு தீவிரமாக ஆலோசித்து வருவதாகவும் இதுகுறித்து கிரிக்கெட் ஆலோசனைக் குழு இன்று முடிவெடுக்கும் என்று தாம் நம்புவதாகவும் அமிதாப் சவுத்ரி கூறினார். இந்திய அணியின் தலைமைப் பயிற்சியாளராக ரவி சாஸ்திரி தேர்வு செய்யப்பட்டதாக ஊடகங்களில் வெளியான செய்தியில் உண்மையில்லை என்றும் அவர் கூறினார்.
இதுகுறித்து சவுரவ் கங்குலி கூறியபோது, பயிற்சியாளர் தேர்வு குறித்து கேப்டன் விராத் கோஹ்லியுடன் ஆலோசித்த பின்னர் முடிவு அறிவிக்கப்படும் என்று தெரிவித்தார்.

More News

இன்று சென்னையில் 1000% மழை பெய்யும்: தமிழ்நாடு வெதர்மேன்

கடந்த சில மாதங்களாக சென்னை உள்பட தமிழகத்தின் அனைத்து பகுதிகளிலும் வெயில் கொளுத்தி வந்தது. நிலத்தடி நீர் இல்லாமல் குடிநீர் தேவைக்கே மக்கள் திண்டாடி வரும் நிலையில் நேற்று முன் தினம் இரவு சென்னையில் நல்ல மழை பெய்து பூமியை குளிர வைத்தது

நானும் விஜய்சேதுபதியும் ஒன்றுமில்லாமல் வந்தவர்கள். இளையராஜா

சென்னை தாம்பரம் அருகே உள்ள தனியார் கல்லூரியில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் இளையராஜா, விஜய் சேதுபதி உள்பட பலர் கலந்து கொண்டு பேசினர்.

'பாகுபலி'க்கு இணையான மும்மொழி படத்தில் நயன்தாரா?

பிரமாண்ட இயக்குனர் எஸ்.எஸ்.ராஜமெளலியின் 'பாகுபலி' படத்தின் இரண்டு பாகங்களிலும் அனுஷ்காஷெட்டி நடித்த தேவசேனா கேரக்டருக்கு முதலில் நயன்தாராவிடம் தான் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது என்றும், நயன்தாராவின் தேதிகள் கிடைக்காததால், அந்த வாய்ப்பு அனுஷ்காவுக்கு சென்றதாகவும் கூறப்படுவதுண்டு.

சிவகார்த்திகேயன் படத்தில் அஜித் பட வில்லன்

அஜித், ஆர்யா, நயன்தாரா நடித்த 'ஆரம்பம்' படத்தில் ஊழல் செய்யும் அரசியல்வாதியாக நடித்த மகேஷ் மஞ்ச்ரேக்கரை யாரும் மறந்திருக்க முடியாது...

திலீப் கைது எதிரொலி: நடிகர், தயாரிப்பாளர் சங்கங்கள் எடுத்த அதிரடி முடிவு

பிரபல நடிகர் திலீப், நடிகை பாவனா வழக்கில் அதிரடியாக நேற்று கைது செய்யப்பட்டு நீதிமன்ற காவலில் வைக்கப்பட்டுள்ளார்.