இசை வெளியிட்டு விழாவிற்கு எனக்கு அழைப்பே இல்லை: 'விருமன்' படத்தில் பணிபுரிந்த பிரபலம் வருத்தம்!

  • IndiaGlitz, [Saturday,August 06 2022]

சூர்யா தயாரிப்பில், கார்த்தி நடிப்பில், முத்தையா இயக்கத்தில் உருவான ’விருமன்’ திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா சமீபத்தில் மதுரையில் மிகவும் பிரமாண்டமாக நடந்த நிலையில் இந்த இசை வெளியீட்டு விழாவிற்கு கலந்து கொள்ள எனக்கு அழைப்பு விடுக்கப்படவில்லை என அந்த படத்தில் பணிபுரிந்த பிரபலம் ஒருவர் கூறியிருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

சூர்யாவின் 2டி என்டர்டெயின்மென்ட் நிறுவனத்தின் தயாரிப்பில் கார்த்தி, அதிதிஷங்கர் உள்பட பலர் நடித்துள்ள திரைப்படம் ’விருமன்’. இந்த படத்தின் இசை வெளியீட்டு விழா மதுரை ராஜா முத்தையா மன்றத்தில் நடைபெற்றது என்பதும் சிறப்பு விருந்தினர்களாக ஷங்கர், பாரதிராஜா உள்பட பலர் கலந்து கொண்டனர் என்பதும் தெரிந்ததே.

இந்த நிலையில் இந்த படத்தில் ’வானம் கிடுகிடுங்க’ என்ற பாடலை எழுதிய பாடலாசிரியர் சினேகன் சமீபத்தில் நடந்த சினிமா விழாவில் பேசும்போது, ’விருமன்’ படத்தில் பாடல் எழுதிய எனக்கு அந்த படத்தின் இசை வெளியீட்டு விழாவிற்கு அழைப்பிதழ் கூட வரவில்லை என்றும் இன்னும் கொஞ்ச காலத்தில் பாடலாசிரியர் என்ற இனமே இல்லாமல் போய்விடும் என்றும் வருத்தத்துடன் தெரிவித்துள்ளார். அவரது இந்த பேச்சு திரையுலகில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

More News

என்ன தலைவரே, திரும்பவும் லூப்பா? ஆனால் இது வேற மாதிரியா இருக்கு? ஜிவி 2' டிரைலர் குறித்து 'மாநாடு' நடிகர்!

சிம்பு நடித்த 'மாநாடு' திரைப்படம் சமீபத்தில் வெளியாகி மிகப்பெரிய வெற்றி பெற்ற நிலையில் இந்த படம் தமிழின் முதல் 'லூப்' கதையம்சம் கொண்ட படம் என்று கூறப்பட்டது

என்னை எப்படியெல்லாம் கொடுமைப்படுத்தினார்கள் தெரியுமா? விவாகரத்து குறித்து மனம் திறந்த 'விக்ரம்' நடிகை!

உலகநாயகன் கமல்ஹாசன் நடித்த 'விக்ரம்' திரைப்படத்தில் விஜய் சேதுபதியின் மூன்று மனைவிகளில் ஒருவராக நடித்த விஜே மகேஸ்வரி தன்னை தனது கணவர் வீட்டில் எப்படி

சின்னத்திரை நடிகை மற்றும் பாஜக பிரமுகர் மீது போலீஸில் புகார் அளித்த சினேகன்: என்ன காரணம்?

சின்னத்திரை நடிகையும் பாஜக பிரமுகருமான நடிகை மீது நடிகரும் பாடல் ஆசிரியருமான சினேகன் காவல்துறையில் புகார் அளித்துள்ளார்.

2 வார இடைவெளியில் அமலாபாலின் இன்னொரு படம் ரிலீஸ்: ஓடிடியா? திரையரங்கா?

நடிகை அமலாபால் நடித்த 'கேடவர்' என்ற திரைப்படம் வரும் 12ஆம் தேதி ஹாட்ஸ்டார் ஓடிடியில் ரிலீசாக இருப்பதாக அறிவிக்கப்பட்டது என்பதை ஏற்கனவே பார்த்தோம்.

நான் இந்த படத்தின் ஹீரோயின் என்பதை நம்பவே முடியவில்லை: சிம்பு பட நாயகியின் பதிவு!

சிம்பு நடித்த படம் ஒன்றில் நாயகியாக நடித்துள்ள நடிகை ஒருவர் தனது சமூக வலைதளப் பக்கத்தில் சிம்புவின் படத்தில் நான் ஹீரோயின் என்பதை என்னால் நம்பவே முடியவில்லை என பதிவு செய்துள்ளார்.