close
Choose your channels

12வது ஐபிஎல் தொடக்க விழா கேன்சல்! ஏன் தெரியுமா?

Friday, February 22, 2019 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

ஒவ்வொரு ஆண்டும் இந்தியாவில் நடைபெற்று வரும் பிரமாண்டமான கிரிக்கெட் திருவிழா ஐபிஎல். இந்த ஆண்டு வரும் மார்ச் மாதம் 23ஆம் தேதி 12வது ஐபிஎல் தொடங்கவுள்ளது. முதல் போட்டியில் சென்னை அணியும், பெங்களூர் அணியும் மோதவுள்ளது.

இந்த நிலையில் ஒவ்வொரு ஆண்டும் ஐபிஎல் போட்டிகள் தொடங்கும் நாளில் நடைபெறும் தொடக்கவிழா கண்களுக்கு விருந்தளிக்கும் வகையில் பிரமாண்டமான வான வேடிக்கைகளுடன் தொடக்கவிழா நடைபெறும், இதற்காகவே ஒருசில கோடிகளை ஐபிஎல் நிர்வாகம் செலவு செய்யும்.

ஆனால் இந்த ஆண்டு நடைபெறும் 12வது ஐபிஎல் தொடரின் தொடக்க விழாவிற்கு பதிலாக, அதற்கு செலவு செய்யும் தொகையை புல்வாமா தாக்குதலில் உயிரிழந்த வீரர்களின் குடும்பத்திற்கு ஐபிஎல் நிர்வாகம் வழங்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
 

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.