'பிகில்' படத்தில் அரசியல் உண்டா? அர்ச்சனா கல்பாதி 

  • IndiaGlitz, [Saturday,October 12 2019]

கடந்த சில ஆண்டுகளாக விஜய் படம் என்றாலே அதில் அரசியல் இல்லாமல் இருக்காது. ‘தலைவா’ படம் முதல் சமீபத்தில் வெளியான ‘சர்க்கார்’ படம் வரை விஜய் படத்தில் அரசியல் இருப்பதும், அதற்கு அரசியல்வாதிகள் எதிர்ப்பு தெரிவிப்பதும் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் ‘பிகில்’ ஒரு ஸ்போர்ட்ஸ் படமாக இருந்தாலும் அதிலும் அரசியல் இருக்கும் என்றே கூறப்பட்டது. இதுகுறித்து அர்ச்சனா கல்பாதி பேட்டி ஒன்றில் கூறியதாவது

எங்கள் நிறுவனத்தின் கொள்கைகளில் ஒன்று அரசியல் படம் எடுக்கக்கூடாது என்பதுதான். எனவே ‘பிகில்’ படத்தில் அரசியல் இருக்காது. அதேசமயம் ஸ்போர்ட்ஸ் அரசியலாக்கப்படுவது குறித்த காட்சிகள் இருக்கும்.

மேலும் பிகில் திரைப்படம் பெண்களுக்கான படம். ஒரு பெண் சமுதாயத்தில் முன்னேற சந்திக்கும் சவால்களை எப்படி முறியடிக்கின்றார் என்பது தான் இந்த படத்தின் கதை. பெண்கள் அனைவரும் கண்டிப்பாக இந்த படத்தை ரசிப்பார்கள்

நாங்கள் ஆரம்பத்தில் இருந்தே ஒரு விஷயத்தை கூறிவருகிறோம். பிகில் படத்தில் நீங்கள் யாருமே எதிர்பாராதது ஒன்று இருக்கும் என்று. அந்த எதிர்பாராதது என்ன? என்பது இன்று வெளியாகும் டிரைலரில் தெரியும்.

கதை, பட்ஜெட், விஜய்யின் கால்ஷீட் என அனைத்தும் சரியாக அமைந்ததால் ‘பிகில்’ படம் எங்கள் நிறுவனத்தால் தயாரிக்கப்பட்டது. அதேபோல் அஜித்துக்கு ஏற்ற கதை, அவருடைய ஒப்புதல், நாங்கள் எதிர்பார்க்கும் பட்ஜெட் என அனைத்தும் சரியாக அமைந்தால் அஜித் படத்தையும் கண்டிப்பாக தயாரிப்போம்’ என்று அர்ச்சனா கல்பாதி கூறியுள்ளார்.

More News

'மிக மிக அவசரம்' ரிலீஸ் பிரச்சனை: தயாரிப்பாளர் சங்கத்தின் அதிரடி அறிக்கை

தயாரிப்பாளர் மற்றும் இயக்குனர் சுரேஷ் காமாட்சியின் 'மிக மிக அவசரம்' திரைப்படம் நேற்று வெளியாகவிருந்த நிலையில் திடீரென இந்த படத்திற்கு திரையரங்குகள் மறுக்கப்பட்டதால்

'பிகில்' டிரைலர் குறித்து அர்ச்சனா கல்பாதியின் லேட்டஸ்ட் அப்டேட்

தளபதி விஜய் நடிப்பில் அட்லி இயக்கத்தில் ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் ஏஜிஎஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் உருவாகியுள்ள 'பிகில்' திரைப்படம் வரும் தீபாவளி அன்று திரைக்கு வரவுள்ளது

இன்றைய தலைமுறையின் சில்க்ஸ்மிதா: வைரலாகும் வீடியோ

கடந்த 90ஆம் ஆண்டுகளில் தமிழ் சினிமாவில் மிக பிரபலமாக இருந்தவர் நடிகை சில்க் ஸ்மிதா. அந்த காலகட்டத்தில் இவர் நடிக்காத படங்களை விரல்விட்டு எண்ணி விடலாம்.

ஒருநாள் போட்டியில் அதிவேக இரட்டைச்சதம்: கேரள வீரரின் சாதனை

விஜய் ஹசாரே டிராபி கிரிக்கெட் போட்டி தொடர் தற்போது நடைபெற்று கொண்டிருக்கும் நிலையில் நேற்று கோவா மற்றும் கேரள அணிகளுக்கு இடையே ஒருநாள் கிரிக்கெட் போட்டி நடைபெற்றது

தக்காளி ரசமும், தஞ்சாவூர் கோழிக்கறியும்! சீன அதிபர் விருந்தின் மெனு

சீன அதிபர் சென்னை மற்றும் மாமல்லபுரத்திற்கு இரண்டு நாள் பயணமாக நேற்று வருகை தந்தார். அவருக்கு தமிழர்கள் சார்பில் சிறப்பாக வரவேற்பு அளிக்கப்பட்டது.