close
Choose your channels

தீபாவளி அன்று சென்னையில் மழை இருக்குமா? வெதர்மேன் தகவல்

Saturday, November 3, 2018 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

ஒவ்வொரு ஆண்டும் தீபாவளி அன்று மட்டுமின்றி அதற்கு முந்தைய, பிந்தைய நாட்களில் மழை பெய்து கொண்டிருக்கும் நிலையில் இந்த ஆண்டு தீபாவளி அன்று சென்னையில் மழை இருக்காது என்று தமிழ்நாடு வெதர்மேன் தனது ஃபேஸ்புக் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார்.

அதேபோல் சென்னையைப் பொருத்தவரை அடுத்த சில நாட்களுக்கு வறண்ட வானிலையே நிலவும் என்றும் இன்று காலை பெய்தது போல் காலை நேரங்களில் ஆங்காங்கே மழைக்கு வாய்ப்பிருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

மேலும் தென் தமிழகத்தில் குறிப்பாக திருநெல்வேலி, தூத்துக்குடி மாவட்டங்களில் தற்போது பலத்த மழை பெய்து வந்தாலும், காற்று வலுவடைந்து இலங்கை நோக்கி நகர்ந்து வருவதால் வரும் நாட்களில் வானிலையில் பெரிய நிகழ்வு ஏதும் ஏற்பட வாய்ப்பில்லை என்று அவர் தெரிவித்துள்ளார்.

மேலும் தற்போது தென் தமிழகத்தில் அதி கனமழை பெய்துள்ளதாகவும், தென் மாவட்டங்களில் 204.5 மி.மீ மழை பதிவாகியிருப்பதாகவும் இதன் காரணமாக. குற்றாலம் அருவி நிறைந்து வழிந்தோடும் சூழல் உள்ளதாகவும் தமிழ்நாட் வெதர்மேன் குறிப்பிட்டுள்ளார்.

 

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.