close
Choose your channels

சிவாஜி, கமல் பட பாணியில் கார்த்திக் நரேனின் அடுத்த படம்

Wednesday, August 16, 2017 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

தமிழ் திரைப்படங்களில் பாடல்களே இல்லாமல் வெளிவந்த முதல் படம் சிவாஜி கணேசனின் 'அந்த நாள்'. அதன் பின்னர் கமல்ஹாசனின் 'குருதிப்புனல்', பேசும்படம்' போன்ற ஒருசில படங்களும் பாடல்கள் இல்லாமல் வெளிவந்தது.

இந்த நிலையில் கடந்த ஆண்டு 'துருவங்கள் 16' என்ற வித்தியாசமான படத்தை இயக்கி மாபெரும் பாராட்டுக்களை பெற்ற இளம் இயக்குனர் கார்த்திக் நரேனின் அடுத்த படமான 'நரகாசுரன்' படத்திலும் பாடல்கள் இல்லை என்ற தகவல் தற்போது வெளிவந்துள்ளது. கார்த்திக் நரேனின் முதல் படமான 'துருவங்கள் 16' படத்தில் இரண்டு பாடல்கள் மட்டுமே இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

'நரகாசுரன்' படத்தின் ஆரம்பகட்ட பணிகள் விறுவிறுப்புடன் நடந்து வரும் நிலையில் இந்த படத்தின் படப்பிடிப்பு வரும் செப்டம்பரில் ஊட்டியில் தொடங்கவுள்ளது. அரவிந்த்சாமி, 'மாநகரம்' புகழ் சந்தீப் கிஷான் முக்கிய வேடங்களில் நடிக்கும் இந்த படத்தில் ஸ்ரேயா சரண், இந்திரஜித் உள்பட பலர் நடிக்கவுள்ளனர். ரான் எதான் யோஹன் இந்த படத்திற்கு இசையமைக்கின்றார். இந்த படத்தை கெளதம் மேனன் மற்றும் கார்த்திக் நரேன் இணைந்து தயாரிக்கின்றனர்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.