close
Choose your channels

அனிருத் இசையமைக்கும் படத்தில் பாடல்களே இல்லையா? பிரபல ஹீரோ படத்தின் முக்கிய தகவல்..!

Sunday, April 28, 2024 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

ஒரு திரைப்படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார் என்றால் அதில் ஆட்டம் போட வைக்கும் பாடல்கள் உண்டு என்பதுதான் அனைவரும் எதிர்பார்த்து அந்த படத்திற்கு செல்வதுண்டு. ஆனால் அனிருத் இசையமைக்கும் படத்தில் பாடல்கள் இல்லை என்ற தகவல் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

தமிழ் திரையுலகின் முன்னணி இசையமைப்பாளர் அனிருத், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், உலக நாயகன் கமல்ஹாசன், தளபதி விஜய் மற்றும் தல அஜித் உள்பட பல முன்னணி ஹீரோக்களின் படங்களுக்கு இசையமைத்து வருகிறார் என்பது தெரிந்தது.

இந்த நிலையில் தமிழ் மட்டுமின்றி தெலுங்கிலும் அனிருத் பல திரைப்படங்களுக்கு இசையமைத்து வரும் நிலையில் பிரபல தெலுங்கு நடிகர் விஜய் தேவரகொண்டாவின் அடுத்த படத்திற்கு அனிருத் இசையமைக்க இருப்பதாக சமீபத்தில் அறிவிக்கப்பட்டது.

இந்த படம் தமிழில் கார்த்தி நடிப்பில் வெளியான ’கைதி ’ படம் போலவே ஒரு விறுவிறுப்பான படம் என்றும் இந்த படத்தில் விஜய் தேவரகொண்டா காவல்துறை அதிகாரியாக நடிக்க இருப்பதாகவும் கூறப்படுகிறது. இந்த படத்தின் திரைக்கதை விறுவிறுப்பாக செல்லும் என்பதால் இந்த படத்திற்கு பாடல்கள் தேவையில்லை என்று இயக்குனர் கௌதம் என்பவர் முடிவு செய்திருப்பதாகவும் அனிருத் இந்த படத்திற்கு பின்னணி இசை மட்டுமே அமைக்க இருப்பதாகவும் கூறப்படுகிறது. பாடல்கள் இல்லை என்றாலும் அதை ஈடுகட்டும் வகையில் பின்னணி இசையில் அனிருத் பட்டையை கிளப்பி விடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

விஜய் தேவரகொண்டாவின் 12வது படமாக உருவாகும் இந்த படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.   

Related Videos