வெற்றி பெறும் வரை நிறுத்த வேண்டாம்.. நாங்கள் உங்களுடன் இருக்கிறோம்: ரஜினிகாந்த்


Send us your feedback to audioarticles@vaarta.com


பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் உள்ள தீவிரவாத முகாம்கள் மீது இந்திய ராணுவம் இன்று அதிகாலை தாக்குதல் நடத்திய நிலையில் வெற்றி பெரும் வரை நிறுத்த வேண்டாம், நாங்கள் உங்களுடன் இருக்கிறோம் என சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார்.
பாகிஸ்தான் மீதான தாக்குதலுக்கு இந்தியாவில் உள்ள தலைவர்கள் மட்டுமின்றி, உலக தலைவர்களும் ஆதரவு தெரிவித்து வருகின்றனர் என்பதும், பயங்கரவாதத்திற்கு எதிராக உலகம் முழுவதும் குரல் கொடுத்து வருகின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
அந்த வகையில், தமிழ் திரையை சேர்ந்த பலரும் தங்களது சமூக வலைதளங்களில் இந்திய ராணுவத்தின் தைரியமான நடவடிக்கைகளுக்கு பாராட்டு தெரிவித்து வருகின்றனர். குறிப்பாக சற்றுமுன் தளபதி விஜய் இந்திய ராணுவத்தின் பாதுகாப்பு நடவடிக்கைகளுக்கு ஒரு ராயல் சல்யூட் என பதிவு செய்திருந்தார்.
இந்த நிலையில், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தனது சமூக வலைதள பக்கத்தில் இது குறித்து பதிவு செய்துள்ளார். "போராளிகளின் சண்டை தொடங்கிவிட்டது. வெற்றி பெறும் வரை இனி நமக்கு ஓய்வதில்லை. ஒட்டுமொத்த தேசமும் உங்களுடன் இருக்கிறது. ஜெய்ஹிந்த்!" என்று குறிப்பிட்டுள்ளார்.
இந்த பதிவில் அவர் பிரதமர் மோடி மற்றும் உள்துறை அமைச்சகத்தையும் டேக் செய்துள்ளார். ரஜினிகாந்தின் இந்த பதிவு தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
The fighter's fight begins...
— Rajinikanth (@rajinikanth) May 7, 2025
No stopping until the mission is accomplished!
The entire NATION is with you. @PMOIndia @HMOIndia#OperationSindoor
JAI HIND 🇮🇳
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com
Comments