போலீஸ் மேலேயே கைவச்சிட்டியா... சுரேஷ் காமாட்சியின் 'நூடுல்ஸ்' டிரைலர்..!

  • IndiaGlitz, [Wednesday,August 23 2023]

சிம்புவின் ’மாநாடு’ உள்பட பல வெற்றி திரைப்படங்களை தயாரித்த சுரேஷ் காமாட்சி தயாரிப்பில் உருவான அடுத்த திரைப்படம் ’நூடுல்ஸ்’. இந்த படம் வரும் செப்டம்பர் 8ஆம் தேதி திரையரங்கில் ரிலீஸ் ஆக இருக்கும் நிலையில் இந்த படத்தின் டிரைலர் சற்றுமுன் வெளியாகி இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.

ஹரிஷ் உத்தமன் நாயகனாக நடித்திருக்கும் இந்த படத்தில் திரௌபதி படத்தில் நடித்த ஷீலா ராஜ்குமார் நாயகியாக நடித்துள்ளார். மதன் தக்ஷிணாமூர்த்தி இயக்கத்தில் உருவான இந்த படத்தில் நாயகன் ஹரிஷ் உத்தமன், எதிர்பாராத விதமாக போலீசை அடித்து விட அதனால் அவரது குடும்பத்திற்கு ஏற்படும் பிரச்சனை என்ன என்பதுதான் இந்த படத்தின் கதை என ட்ரைலரிலிருந்து தெரிய வருகிறது.

உணர்ச்சிகரமான காட்சிகள், அதிரடியான போலீஸ் காட்சிகள் என டிரைலரில் இருக்கும் விறுவிறுப்பான காட்சிகளை பார்க்கும்போது படமும் நிச்சயம் ரசிகர்கள் மனதை கவரும் வகையில் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

‘நூடுல்ஸ்’ திரைப்படம் தமிழ் சினிமாவில் பேசப்படும் ஒரு படமாக இருக்கும் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கிறது என்றும் நிச்சயம் இந்த படம் பார்ப்பவர்களை ஏமாற்றாது என்றும் இந்த படத்தின் கதை மீது நம்பிக்கை வைத்து இந்த படத்தை தயாரிக்க முடிவு செய்தேன் என்றும் தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி தெரிவித்துள்ளார்.

More News

தப்பு யார் செஞ்சிருந்தாலும் அவங்க தப்பானவங்க தான்.. விமலின் 'துடிக்கும் கரங்கள்' டிரைலர்..!

விமல் நடித்த 'துடிக்கும் கரங்கள்' என்ற திரைப்படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து ரிலீஸ்-க்கு தயாராக இருக்கும் நிலையில் இந்த படத்தின் டிரைலர் சற்றுமுன் இணையத்தில் வெளியாகி வைரல் ஆகி வருகிறது.

நிலவின் தென்துருவத்தில் கால்பதித்த முதல் நாடு இந்தியா: இஸ்ரோவுக்கு குவியும் வாழ்த்துக்கள்..!

நிலவின் தென் துருவதற்கு அனுப்பப்பட்ட இந்தியாவின் சந்திராயன் 3 என்ற விண்கலம் வெற்றிகரமாக நிலவில் தரையிறங்கியதை அடுத்து பிரதமர் மோடி இஸ்ரோ விஞ்ஞானிகளுக்கு வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார். 

மீண்டும் ஷங்கர் - விக்ரம் படம்.. ரிலீஸ் எப்போது தெரியுமா?

பிரமாண்ட இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் விக்ரம், சதா நடிப்பில் உருவான 'அந்நியன்' திரைப்படம் கடந்த 2005 ஆம் ஆண்டு வெளியாகி மிகப்பெரிய வெற்றி பெற்றது. இந்த படம் 20 கோடி ரூபாய் பட்ஜெட்டில்

வெற்றிமாறன் இயக்கத்தில் மிஸ் ஆன கிரிக்கெட் படம்.. மீண்டும் உருவாகுமா?

பிரபல இயக்குனர் வெற்றிமாறன் இயக்கத்தில் உருவாக இருந்த கிரிக்கெட் படம் ஒன்று மிஸ் ஆகிவிட்டதாகவும் ஆனால் இந்த படம் விரைவில் உருவாக வாய்ப்பு இருப்பதாகவும் நடிகரும் இசையமைப்பாளருமான

'7ஜி ரெயின்போ காலனி 2' படத்தின் நாயகி இவரா?  படப்பிடிப்பு எப்போது?

இயக்குனர் செல்வராகவன் இயக்கத்தில் ஏஎம் ரத்னம் மகன் ரவி கிருஷ்ணா, சோனியா அகர்வால் நடிப்பில் உருவான '7ஜி ரெயின்போ காலனி' என்ற திரைப்படம் கடந்த 2004ஆம் ஆண்டு வெளியாகி மிகப்பெரிய வரவேற்பை பெற்றது.