வெளிநாட்டு திரைப்படங்களின் சிடி விற்றால் மரண தண்டனை: இப்படி ஒரு நாடா?

வெளிநாட்டு திரைப்படங்களின் சிடிக்களை விற்றால் மரண தண்டனை என்றும் வெளிநாட்டு திரைப்படங்களை பார்த்தால் 15 ஆண்டுகள் சிறை தண்டனை என்றும் ஒரு அரசு அறிவிப்பு வெளியிட்டிருப்பது பெரும் அதிர்ச்சியையும் ஆச்சரியத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

உலகில் உள்ள நாடுகளில் இன்று வரை மர்மதேசமாக இருப்பது வடகொரியா என்பதும் அந்நாட்டு அதிபர் கிம் ஜாங் உன் சர்வாதிகாரி போல் நடந்து கொண்டு மக்களைக் கொடுமைப்படுத்தி வருவதாகவும் கூறப்படுகிறது. வடகொரியா நாட்டில் என்ன நடக்கிறது என்பதை வெளியுலகுக்கு தெரியாமல் உள்ளது என்பதுதான் உண்மை.

குறிப்பாக கொரோனா வைரஸ் பாதிப்பிற்கு பின் சீன எல்லையை வடகொரியா மூடி விட்டதால் அத்தியாவசிய பொருட்கள் கூட கிடைக்காமல் அந்நாட்டு மக்கள் திண்டாடுவதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் வெளிநாட்டு திரைப்படங்களை பார்த்தால் மக்கள் விழிப்புணர்ச்சி அடைந்து அரசை கேள்வி கேட்கத் தொடங்கிவிடுவார்கள் என்ற எண்ணத்தில் வெளிநாட்டு திரைப்படங்களை பார்த்தால் 15 ஆண்டுகள் சிறை தண்டனை என்று அரசு புதிய சட்டத்தை கொண்டு வந்தது. அது மட்டுமின்றி வெளிநாட்டு திரைப்படங்களின் சிடி வீடியோக்களை கடத்தி வந்து விற்பனை செய்பவர்களுக்கு மரண தண்டனை என்று அறிவித்துள்ள கிம் ஜாங் உன் அரசு, சமீபத்தில் லீ என்ற இளைஞர் வெளிநாட்டு சிடிக்களை திருட்டுத்தனமாக கொண்டு வந்ததை அடுத்து மரண தண்டனை நிறைவேற்றியும் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

உலகில் உள்ள அனைத்து நாடுகளின் மக்களும் வீட்டிலிருந்தவாறே செல்போனிலேயே வெளிநாட்டு திரைப்படங்களை ரசித்துக் கொண்டிருக்கும் நிலையில் வெளிநாட்டு திரைப்படங்களை பார்த்தால் மரண தண்டனை என்று வட கொரியா நாட்டின் அதிபர் கிம் ஜாங் உன் சட்டம் இயற்றி இருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
 

More News

அனைத்து மாநிலங்களுக்கும் இனி இலவச தடுப்பூசி: பிரதமர் மோடியின் உரையின் முக்கிய அம்சங்கள்!

பிரதமர் மோடி இன்று மாலை 5 மணிக்கு நாட்டு மக்களுக்கு உரையாற்றுகிறார் என்ற செய்தி வெளியான நிலையில் அவரது உரையின் முக்கிய தொகுப்புகள் இதோ:

கிளாமரில் கெத்து காட்டிய குடும்ப குத்து விளக்கு சீரியல் நடிகை!

தொலைக்காட்சி சீரியலில் குடும்ப விளக்காக, குடும்ப பாங்கான வேடங்களில் நடிக்கும் பல நடிகைகள் இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் கவர்ச்சியின் உச்சத்திற்கே சென்று கிளாமர் புகைப்படங்களை

லோகேஷ் கனகராஜ் படத்தின் இந்தி ரீமேக்கில் காஜல் அகர்வால்?

லோகேஷ் கனகராஜ் இயக்கிய வெற்றி படங்களில் ஒன்று 'கைதி' என்பது தெரிந்ததே. கார்த்தி நடித்த இந்த திரைப்படத்தில் இரண்டு சிறப்பு அம்சங்கள் இருந்தது. ஒன்று இந்த படத்தில் பாடல்கள் இல்லை,

கருவாடு மீனாகாது… சசிகலா குறித்து முன்னாள் அமைச்சர் கடும் விமர்சனம்!

கடந்த சில தினங்களுக்கு முன்பு திருமதி சசிகலா “அதிமுகவை சரிசெய்து விடலாம்” என்பது போன்ற வார்த்தைகளை தனது தொண்டர் ஒருவரிடம் தொலைபேசி வாயிலாக தெரிவித்து இருந்தார்.

மீதமுள்ள ஐபிஎல் போட்டிகள் நடக்கும் தேதி… வெளியான பரபரப்பு தகவல்!

ஐக்கிய அரபு எமிரேட்ஸில் வரும் செப்டம்பர் 19 தொடங்கி அக்டோபர் 15 ஆம் தேதிக்குள் மீதமுள்ள 31 ஐபிஎல் போட்டிகளையும் நடத்த பிசிசிஐ திட்டமிட்டு உள்ளதாகத் தகவல் வெளியாகி இருக்கிறது.