கொரியா நாடுகளை சுற்றித் திரியும் மஞ்சள் தூசு படலம்… கொரோனா பாதிப்புக்கு அறிகுறியா???

 

ஒவ்வொரு ஆண்டும் மங்கோலியா மற்றும் சீனாவின் பல பாலைவனப் பகுதிகளில் இருந்து மணல் தூசுகள் அடங்கிய மஞ்சள் தூசு படலங்கள் கொரிய நாடுகளை நோக்கி படையெடுக்கிறது. இந்த மஞ்சள் தூசு படலங்கள் மூலம் தற்போது வடகொரியாவில் கொரோனா பாதிப்பு ஏற்பட வாய்ப்பு இருப்பதாகக் அந்நாட்டு அரசு, மக்களை கடுமையாக எச்சரித்து வருகிறது. இதனால் சில மாதங்களுக்கு வெளிப்புறப் பூச்சு போன்ற கட்டுமான பணிகளை நிறுத்தி வைக்குமாறும் வடகொரியா மக்களுக்கு உத்தரவிடப் பட்டு இருக்கிறது.

கொரோனா வைரஸ் காற்றின் மூலம் பரவும் என்றும் காற்றில் பல மணிநேரங்கள் வரை கொரோனா வைரஸால் தாக்குப் பிடிக்க முடியும் என்றும் அமெரிக்காவின் நோய்க் கட்டுப்பாட்டு மையம் உறுதிப்படுத்தி இருந்தது. என்றாலும் காற்றில் சுற்றித்திரியும் கொரோனா வைரஸ் மற்றர்வர்களுக்கு மிகவும் அரிதாகவே நோயை ஏற்படுத்தும் என்றும் அந்த விஞ்ஞானிகள் விளக்கம் அளித்து இருந்தனர்.

பொதுவா கொரோனா பாதிப்பு என்பது பாதிக்கப்பட்ட நபருடன் நெருக்கமாக இருக்கும்போதோ அல்லது அவர் இருமல் மற்றும் தும்மும்போதோ தான் மற்றவர்களுக்கு பாதிப்பு ஏற்படுகிறது. காற்றில் சுற்றித்திரியும் கொரோனா வைரஸ் மற்றவர்களுக்கு பாதிப்பை ஏற்படுத்துவது சாத்தியமில்லாத காரியம் எனவும் விஞ்ஞானிகள் விளக்கம் அளித்து உள்ளனர்.

இந்நிலையில் வடகொரிய அரசு சீனாவில் இருந்து பரவும் மஞ்சள் தூசு படலத்தின் மூலம் நாட்டிற்குள் கொரோனா வைரஸ் பரவுவதற்கான வாய்ப்பு இருப்பதாக கூறி வருகிறது. மேலும் அதில் இருந்து பாதுகாத்துக் கொள்ள மக்களை வீட்டிற்குள்ளே இருக்கும் படியும் கேட்டுக் கொண்டிருக்கிறது. அதோடு கட்டுமான பணிகளை நிறுத்தி வைக்குமாறு உத்தரவிட்டு இருக்கிறது.

இதனால் வடகொரியாவில் கொரோனா அச்சம் அதிகரித்து காணப்படுவதாக ஊடகங்கள் சந்தேகத்தை எழுப்பி வருகின்றன. வடகொரியாவில் இதுவரை கொரோனா பாதிப்பு இருப்பதற்கான அடையாளத்தை பார்க்க முடியவில்லை என்று தொடர்ந்து அதிபர் கிம் ஜாங் உன் தெரிவித்து வருகிறார். மேலும் பாதுகாப்பு காரணங்களுக்காக கடந்த ஜனவரி மாதத்திலேயே சீனாவின் எல்லை உட்பட பல நாடுகளோடு இருந்து வந்த எல்லை முற்றிலும் மூடப்பட்டு விட்டது.

விமானப் போக்குவரத்து ரத்து, வெளிநாட்டு பயணிகளுக்கு அனுமதி ரத்து எனக் கடுமையான விதிமுறைகளை கடைபிடித்து வரும் வடகொரியாவில் இதுவரை கொரோனா பாதிப்பு இல்லை என்றே அந்நாடு கூறிவருகிறது. இந்நிலையில் சீனாவில் இருந்து பரவும் மஞ்சள் தூசு படலத்தைக் குறித்தும் எச்சரிக்கையாக இருக்குமாறு வடகொரிய அரசு கேட்டுக்கொண்டுள்ளது. தென் கொரியா இதுபோன்ற பாதுகாப்பு நடவடிக்கைகள் எதையும் எடுக்கவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.

More News

தொடரும் அர்ச்சனாவின் நாட்டாமைத்தனம், சீண்டும் பாலாஜி: பிக்பாஸ் பரபரப்புகள்!

பிக்பாஸ் வீட்டிற்குள் அர்ச்சனா வைல்ட்கார்ட் எண்ட்ரியாக வந்த போது பிக்பாஸ் வீடே கலகலப்பாக மாறியது உண்மைதான். ஆனால் ஓரிரண்டு நாட்களில் அர்ச்சனா தானும் 16 போட்டியாளர்களில் ஒருவர்

சிஎஸ்கே ரசிகர்களுக்கு விருந்தளிக்கும் நயன்தாரா! ஆச்சரிய தகவல்

நயன்தாரா நடிப்பில் ஆர்ஜே பாலாஜி இயக்கத்தில் உருவாகியுள்ள 'மூக்குத்தி அம்மன்' திரைப்படம் வரும் தீபாவளி அன்று ஓடிடியில் வெளியாக இருப்பதாக சமீபத்தில்

முகக்கவசம் அணிந்து ஒய்யாரமாக வாக்கிங்… வைரலாகும் செல்லப்பிராணியின் வீடியோ!!!

அயர்லாந்து நாட்டில் முகக்கவசம் அணிந்து கொண்டு ஒரு நாய்க்குட்டி தனது எஜமானியுடன் ஒய்யாரமாக வாக்கிங் செல்லும் காட்சி இணையத்தில் வைரலாகி வருகிறது

நூடுல்ஸ் சூப் சாப்பிட்டு ஒரே குடும்பத்தை சேர்ந்த 9 பேர் உயிரிழப்பு… பதற வைக்கும் அதன் பின்னணி!!!

சீனாவில் நூடுல்ஸ் சூப் சாப்பிட்ட ஒரே குடும்பத்தை சார்ந்த 9 பேர் உயிரிழந்த சம்பவம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.

முடிவுக்கு வந்தது 'தடையில்லா சான்றிதழ்' பிரச்சனை: 'சூரரை போற்று' எப்போது ரிலீஸ்?

'சூரரை போற்று' திரைப்படம் வரும் 30ஆம் தேதி வெளியிட திட்டமிடப்பட்டு இருந்த நிலையில் திடீரென இந்திய விமானப்படையின் தடையில்லாச் சான்றிதழ் கிடைப்பதில் தாமதம் ஆனதால் ரிலீஸ் தேதி ஒத்தி வைக்கப்பட்டது.