ரஜினி ரசிகர்களுக்கு டிசம்பர் 11ல் காத்திருக்கும் ஆச்சரியம்

  • IndiaGlitz, [Friday,November 22 2019]

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்கள் நடித்த ’பேட்ட’ திரைப்படம் கடந்த ஜனவரி மாதம் வெளியாகி மிகப்பெரிய வெற்றி பெற்றது என்பது தெரிந்ததே. இதனை அடுத்து அவர் தற்போது ஏஆர் முருகதாஸ் இயக்கத்தில் உருவாகியுள்ள ’தர்பார்’ என்ற படத்தில் நடித்து முடித்துள்ளார். இந்த படம் பொங்கல் விருந்தாக வெளியாகவுள்ளது. மேலும் அவர் நடிக்கவுள்ள அடுத்த படத்தை சிறுத்தை சிவா இயக்க உள்ளார் என்பதும் இந்த படத்தின் படப்பிடிப்பு அடுத்த மாதம் தொடங்க உள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் சமீபத்தில் கோல்டன் ஐகான் விருதை பெற்ற சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்கள் வரும் டிசம்பர் 12ஆம் தேதி தனது எழுபதாவது பிறந்த நாளை கொண்டாட உள்ளார். இந்த பிறந்த நாளை ரஜினிகாந்த் ரசிகர்கள் மிகச் சிறப்பாக கொண்டாட முடிவு செய்துள்ளனர்.

இந்த நிலையில் ரஜினிகாந்த் பிறந்த நாளை அடுத்து டிசம்பர் 11ஆம் தேதி அவர் நடித்த பாட்ஷா திரைப்படம் டிஜிட்டலில் வெளியாக உள்ளது. ரஜினிகாந்த் படங்களிலேயே மிகச் சிறந்த படங்களில் ஒன்றாக கருதப்படும் ’பாட்ஷா’ திரைப்படம் தமிழ் திரையுலகை ஆச்சரியப்பட வைத்த ஒரு திரைப்படம் என்பதும் இந்தத் திரைப்படத்தை ரசிகர்கள் எப்போது பார்த்தாலும் விருந்தாக அமையும் என்பதும் குறிப்பிடத்தக்கது. மேலும் இந்த படம் தற்போது டிஜிட்டலில் ரிலீஸ் ஆக உள்ளதால் ரஜினி ரசிகர்களுக்கு ஒரு ஆச்சரியமான அனுபவம் கிடைக்கும் என்று கருதப்படுகிறது.