US: கமலா ஹாரிஸ், செலின் கவுண்டர் இவர்களைச் சுற்றும் சில திடுக்கிடும் விமர்சனங்கள்!!!

 

அமெரிக்காவின் துணை அதிபராகத் தேர்ந்தெடுக்கப்பட்டு இருக்கும் கமலா ஹாரிஸ் தன்னுடைய வெற்றிக்குப் பின்னர் அந்தக் இறைச்சியை சாப்பிட்டார் எனக் கூறி அவரின் ஒரு புகைப்படம் தற்போது சமூக வலைத்தளங்களில் கடும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. மத நம்பிக்கை அதிகமாக இருக்கும் இந்தியக் கலாச்சாரத்தில் சில உணவுகள் மீது அருவருப்பு தன்மை காட்டப்படுகிறது. அந்த வகையில் தற்போது அமெரிக்காவின் துணை அதிபராகத் தேர்ந்தெடுக்கப் பட்டிருக்கும் கமலா ஹாரிஸ் மீதும் சில விமர்சனங்கள் வைக்கப்பட்டு வருகின்றன.

தேர்தலில் கிடைத்த வெற்றிக்குப் பின்னர் கமலா ஹாரிஸ் மகிழ்ச்சியில் மாட்டு இறைச்சி சாப்பிட்டதாகக் கூறி புகைப்படம் ஒன்று சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. மேலும் மாட்டு இறைச்சியை உண்டதால் இவர் பாதி பிராமினி ஆகிவிட்டார். அதாவது அவர் இந்தியர்களின் எதிரியாகி விட்டார் என்று கூறும் ஒரு புகைப்படத் தற்போது சமூக வலைத்தளங்களில் கடும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறார்.

இதைத் தொடர்ந்து அந்தப் புகைப்படம் தேர்தல் வெற்றிக்குப் பின் எடுக்கப் பட்டதல்ல. கடந்த வருடம் எடுக்கப்பட்டது. மேலும் கமலா ஹாரிஸ் மாட்டு இறைச்சியை சாப்பிடவில்லை. அவர் சாப்பிடுவது பன்றி இறைச்சி என்பதும் தெளிவாகி இருக்கிறது. இதனால் கமலா ஹாரிஸ் மாட்டு இறைச்சியை சாப்பிடவில்லை என்பது தெளிவாகி இருக்கிறது.

அதேபோல அமெரிக்காவின் புதிய அதிபராகத் தேர்ந்தெடுக்கப் பட்டிருக்கும் ஜோ பிடன், தான் பொறுப்பு ஏற்றக்கொண்டதும் கொரோனா தடுப்பு நடவடிக்கையை மேற்கொள்ள இருப்பதாக அறிவிப்பு வெளியிட்டு உள்ளார். இந்த நடவடிக்கைக்காக 13 பேர் கொண்ட ஆலோசனை குழு ஒன்றையும் அவர் ஏற்படுத்தி இருக்கிறார். அப்படி ஜோ பிடன் ஏற்படுத்தி இருக்கும் கொரோனா தடுப்பு ஆலோசனைக் குழுவில் இந்தியாவை பூர்வீகமாகக் கொண்ட 2 பேர் இடம் பெற்றுள்ளனர். அதில் ஒருவர் விவேக் மூர்த்தி.

இன்னொரு நபர் நமது மாநிலத்தின் ஈரோடு மாவட்டத்தைப் பூர்வீகமாகக் கொண்டவர். அவரது பெயர் டாக்டர் செலின் ராணி கவுண்டர். பெரும்பாலும் இவரது பெயரை செலின் கவுண்டர் என்றே குறிப்பிடுகின்றனர். இந்நிலையில் கவுண்டர் எனும் பெயர் சாதியைக் குறிப்பதாக உள்ளது. எனவே அதை மாற்றிக் கொள்ளுங்கள் என அவருக்கு ஆலோசனைகள் வழங்கப்பட்டதாகவும் அதைத் தொடர்ந்து அவர் என்னால் மாற்றிக்கொள்ள முடியாது எனக் கூறியதாகவும் பரபரப்பு ஏற்பட்டு இருக்கிறது.

இதுதொடர்பாக செலின் கவுண்டர் வெளியிட்ட அறிக்கையில், “நான் பிறப்பதற்கும் முன்னரே 1970 களின் தொடக்கத்தில் என்னுடைய தந்தை தன்னுடைய பெயரை கவுண்டர் என மாற்றிக் கொண்டார். என்னுடைய பெயர்தான் என் பெயர். இது என்னுடைய வரலாற்றின் அடையாளத்தின் ஒரு பகுதி. அந்த வரலாறில் வலி இருந்தாலும்கூட, நான் திருமணம் செய்துகொண்டே போதும் என்னுடைய பெயரை நான் மாற்றிக் கொள்ளவில்லை. இப்போதும் அதை மாற்றிக் கொள்ள போவதில்லை” என்று குறிப்பிட்டு உள்ளார்.

43 வயதாகும் செலின் கவுண்டரின் தந்தை கடந்த 1960 களிலேயே அமெரிக்காவிற்கு இடம் பெயர்ந்து இருக்கிறார். மேலும் நட்ராஜ் எனும் தன்னுடைய பெயரை அங்குள்ள மற்றவர்கள் உச்சரிப்பதற்கு தடுமாறுவதைப் பார்த்த பிறகு நட்ராஜ்- கவுண்டர் எனப் பெயர் மாற்றம் செய்து கொண்டிருக்கிறார். அந்த பெயரை செலின் தனது திருமணத்திற்கு பிறகும் மாற்றிக் கொள்ளவில்லை. மேலும் வரலாறு வலி மிகுந்ததாக இருந்தாலும் பரவாயில்லை. அந்த வலியைத் தெரிவிக்கும் அடையாளமாக என்னுடைய பெயர் இருக்கட்டும் எனத் தெரிவித்து இருக்கிறார். இவருடைய கருத்துக்கு ஆதரவும் எதிர்ப்பும் தொடர்ந்து கொண்டு வருகின்றன.