தியேட்டரில் ரீரிலீஸ் மட்டுமல்ல, டிஜிட்டலிலும் ரிலீஸ் ஆகும் 'பையா'.. முழு விவரங்கள்

  • IndiaGlitz, [Tuesday,April 02 2024]

14 வருடங்களுக்கு முன்பு வெளியாகி ரசிகர்களின் மனம் கவர்ந்த பல வெற்றி படங்கள் தற்போது டிஜிட்டலுக்கு மாற்றப்பட்டு ரீ ரிலீஸ் செய்யப்பட்டு இன்றைய தலைமுறை ரசிகர்களையும் கவர்ந்து வருகின்றன. அதிலும் குறிப்பாக சமீப நாட்களாக ரீ ரிலீஸ் ஆகும் படங்களின் எண்ணிக்கையும் அதற்கான வரவேற்பும் அதிகரித்து வருகிறது.

அந்த வகையில் இயக்குநர் N.லிங்குசாமி இயக்கத்தில் கார்த்தி நடிப்பில் கடந்த 2010ல் வெளியாகி சூப்பர் ஹிட்டான ‘பையா’ திரைப்படம் புதிய டெக்னாலஜி அடிப்படையில் டிஜிட்டல் தொழில்நுட்பத்திற்கு மாற்றப்பட்டு, வரும் ஏப்ரல்-11ஆம் தேதி ரீ ரிலீஸ் செய்யப்பட இருக்கிறது. Nலிங்குசாமியின் திருப்பதி பிரதர்ஸ் நிறுவனம் இதற்கான பணிகளை மேற்கொண்டு வருகிறது.

இதற்கான முன்னோட்டமாக கடந்த சில தினங்களுக்கு முன் கமலா திரையரங்கில் ஒரு காட்சி திரையிடப்பட்டது. படம் வெளியானபோது ஏற்பட்ட அதே ஆரவாரத்தை இப்போதும் படம் பார்த்தவர்களிடம் பார்க்க முடிந்தது.

‘பருத்திவீரன்’ படத்தின் மிகப்பெரிய வெற்றியைத் தொடர்ந்து அந்த படத்தில் முரட்டுத்தனமான கிராமத்து கதாபாத்திரத்தில் நடித்திருந்த கார்த்தியை அதற்கு முற்றிலும் மாறாக ஒரு நகரத்து சாக்லேட் பாயாக ‘பையா’ படம் மூலம் உருமாற்றினார் இயக்குநர் என்.லிங்குசாமி.

இதில் நடித்த கார்த்தி, தமன்னா ஜோடி ரசிகர்களின் மிகப்பெரிய அன்பை பெற்றது. அதற்குப்பின் இன்னும் அப்படி ஒரு ஜோடி வரவில்லை என்றே சொல்லலாம். மேலும் என்.லிங்குசாமியின் பரபரக்க வைக்கும் திரைக்கதையும் யுவன் சங்கர் ராஜாவின் இசையில் வெளியாகி ரசிகர்களின் தேசிய கீதமாகவே மாறிப்போன பாடல்களும் இந்த படத்தின் வெற்றிக்கு முக்கிய தூண்களாக அமைந்தன.

‘பருத்திவீரன்’ படத்தில் ஒரே ஒரு வேட்டி சட்டையுடன் நடித்த தன்னை இந்த படத்தில் கலர் கலராக உடை அணிய செய்தார் இயக்குநர் என்.லிங்குசாமி என தனது ஆச்சரியத்தை அப்போதே வெளிப்படுத்தி இருந்தார் நடிகர் கார்த்தி.

கார்த்தி ரசிகர்கள் ‘பையா’ ரீ ரிலீஸ் கொண்டாட்டத்திற்காக இப்போதிருந்தே தயாராக ஆரம்பித்து விட்டார்கள். முதல் முறை ரிலீஸ் ஆன போது பெற்ற அதே வரவேற்பை இந்த மறுவெளியீட்டிலும் ‘பையா’ பெரும் என்பது உறுதி. இதற்கான வேலைகளை தயாரிப்பாளர் என்.சுபாஷ் சந்திர போஸ் செய்து வருகிறார்.

 

More News

மணப்பெண்ணுக்கு தாலி கட்டும் வீடியோவை வெளியிட்ட பாலாஜி முருகதாஸ்.. கேப்ஷனில் ஒரு டிவிஸ்ட்..!

பிக் பாஸ் போட்டியாளர்களில் ஒருவரான பாலாஜி முருகதாஸ் நேற்று தனக்கு ஒரு மாதத்திற்கு முன்பே திருமணம் நடந்து விட்டதாகவும் இந்த திருமண அறிவிப்பை வெளியிடாமல் இருந்ததற்கு மன்னிக்கவும் என்று பதிவு செய்த

டிஸ்னி+ ஹாட்ஸ்டார் தளத்தில் ப்ளாக்பஸ்டர் 'ஹனுமான்': தேதி அறிவிப்பு

இந்தியாவின் முன்னணி ஸ்ட்ரீமிங் தளமான டிஸ்னி+ ஹாட்ஸ்டார், ரசிகர்களை மகிழ்விக்கும் வகையில், இயக்குநர் பிரசாந்த் வர்மாவின் அதிரடி பிளாக்பஸ்டர் திரைப்படமான 'ஹனுமான்' படத்தின் தமிழ், கன்னடம்

த்ரிஷா, சமந்தாவை அடுத்து இன்னொரு நடிகை.. அட்லி-அல்லு அர்ஜுன் படத்தில் என்னதான் நடக்குது?

இயக்குனர் அட்லி இயக்க இருக்கும் அடுத்த திரைப்படம் அல்லு அர்ஜுன் நடிக்க உள்ள படம் என செய்திகள் வெளியாகி கொண்டிருக்கும் நிலையில் இந்த செய்தியை விட இந்த படத்தில் நடிக்கும் நாயகி குறித்த செய்தி தான்

மற்றவர்கள் கொடுக்கும் விமர்சனங்களை விட வில்லிசை எனக்கு கொடுக்கும் புகழ் அதிகம் எனக் கூறிய வில்லுப்பாட்டு மாதவி

நான் 13 வயதில் இருந்து பாடுகிறேன்.பாட ஆரம்பித்து 5 வருடம் ஆகிறது.நானூறு மேடையில் இதுவரை பாடி இருக்கிறேன்.வெளி மாவட்டத்தில் இருந்து என்னை அணுகி பாட அழைக்கும்போது அதிக சந்தோஷப்பட்டேன்....

அஞ்சுவட்டத்தம்மன் & வராகி அம்மன் - பஞ்சமி வழிபாடு, வீரகத்தி தோஷம், முருகன் அருள் - ஜோதிடர் சீதா சுரேஷ்

முருகனின் முழு அருளை கிடைக்க என்ன செய்ய வேண்டும் ? ஜோதிடர் சீதா சுரேஷ் கூறுகிறார்.