'பிகில்' படத்தில் ஷாருக்கானுக்கு பதில் நடிக்கும் பிரபலம் இவர்தான்!

  • IndiaGlitz, [Friday,July 12 2019]

விஜய் நடித்து வரும் 'பிகில்' திரைப்படத்தில் ஒரு முக்கிய வேடத்தில் ஷாருக்கான் நடிக்கவிருப்பதாகவும், பின்னர் அவர் ஒரு பாடலுக்கு மட்டும் நடனமாடவிருப்பதாகவும், கடைசியில் கால்பந்து போட்டியை பார்க்கும் ஒரு பார்வையாளராக சிறப்பு தோற்றத்தில் நடிக்கவிருப்பதாகவும் விதவிதமான வதந்திகள் கடந்த சில மாதங்களில் வெளிவந்தது. ஆனால் இந்த படத்தில் ஷாருக்கான் நடிக்கவில்லை என்றே தற்போது படக்குழுவினர்களாக கூறப்பட்டுள்ளது.

இந்த நிலையில் இந்த படத்தில் இன்னொரு பிரபலம் நடிப்பது கிட்டத்தட்ட உறுதியாகியுள்ளது. இந்திய கால்பந்து அணியில் கடந்த 2000ஆம் ஆண்டு முதல் 2004ஆம் ஆண்டு வரை கேப்டனாக இருந்த ஐஎம் விஜயன் என்பவர் இந்த படத்தில் ஒரு முக்கிய கேரக்டரில் நடிக்கவிருப்பதாக சற்றுமுன் தகவல் வெளிவந்துள்ளது. இவர் ஏற்கனவே 'கொம்பன்' மற்றும் 'திமிறு' படங்களில் சிறு கேரக்டரில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இரட்டை வேடத்தில் விஜய் நடித்துள்ள 'பிகில்' படத்தில் அவருக்கு ஜோடியாக நயன்தாராவும், தமிழக பெண்கள் கால்பந்து அணியின் கேப்டனாக இந்துஜாவும் நடித்துள்ளனர். மேலும் ஜாக்கி ஷெராப், விவேக், டேனியல் பாலாஜி, யோகிபாபு உள்பட பலர் நடித்துள்ள இந்த படத்திற்கு ஆஸ்கார் நாயகன் ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்து வருகிறார். அட்லி இயக்கத்தில் ஏஜிஎஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் உருவாகி வரும் இந்த படம் வரும் தீபாவளி அன்று திரைக்கு வரவுள்ளது.

More News

அஜித், சூர்யா பட நாயகிக்கு பெண் குழந்தை!

அஜித் நடித்த 'அசல்', சூர்யா நடித்த 'வாரணம் ஆயிரம்' உள்பட பல தமிழ் திரைப்படங்களிலும் இந்தி, தெலுங்கு படங்களிலும் நடித்த நடிகை சமீரா ரெட்டிக்கு கடந்த 2015ஆம் ஆண்டு அக்சய்

சந்தானம் அடுத்த படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு

காமெடி நடிகராக இருந்தபோது வருடத்திற்கு பத்து படங்களுக்கும் மேல் நடித்து கொண்டிருந்த சந்தானம், ஹீரோவான பின்னர் வருடத்திற்கு ஒரு படம் வெளிவருவதே அரிதாக உள்ளது

உன்னை அவ்வளவு சீக்கிரத்தில் நல்லவளாக விடமாட்டோம்: லாஸ்லியாவை வம்புக்கு இழுத்த வனிதா

பிக்பாஸ் நிகழ்ச்சியில் கடந்த மூன்று நாட்களாக நடைபெற்ற கொலைகாரன்' டாஸ்க் நேற்று முடிவடைந்தது. இந்த டாஸ்க்கில் வனிதா மற்றும் மோகன் வைத்யா சிறப்பாக விளையாடியவர்களாக

பிரபல நடிகையை காரில் இருந்து தூக்கி வீசிய டிரைவர்: போலீசார் அதிரடி நடவடிக்கை

பிரபல தொலைக்காட்சி நடிகை ஒருவரை தனியார் கார் நிறுவனத்தின் டிரைவர் காரில் இருந்து வலுக்கட்டாயமாக இறக்கியதை அடுத்து நடிகை போலீஸ் புகார் கொடுத்துள்ளார்.

இயக்குனர் ரஞ்சித் தந்தை காலமானார்: திரையுலகினர் இரங்கல்

கோலிவுட் திரையுலகின் முன்னணி இயக்குனர்களில் ஒருவராகிய பா.ரஞ்சித் அவர்களின் தந்தை பாண்டுரங்கன் இன்று அதிகாலை காலமானார். அவருக்கு வயது 63