'துணிவு'க்கு முன்பே ஸ்கைடைவிங் செய்து விளம்பரம் செய்யப்பட்ட தமிழ்ப்படம்!

  • IndiaGlitz, [Wednesday,December 28 2022]

அஜித் நடித்த ’துணிவு’ திரைப்படம் வரும் பொங்கல் தினத்தில் வெளியாக இருக்கும் நிலையில் இந்த படத்தின் புரமோஷன் விண்ணைத்தொடும் அளவிற்கு இருக்கிறது என்பதை பார்த்து வருகிறோம். குறிப்பாக கடந்த இரண்டு நாட்களுக்கு முன்னர் இந்த படத்தின் போஸ்டரை துபாயில் ஸ்கை டைவிங் மூலம் பாராசூட்டிலிருந்து குதித்து வெளியிடப்பட்டது. இதுகுறித்த வீடியோ இணையதளங்களில் வைரலானது.

மேலும் இந்த படத்தின் வெளிநாட்டு உரிமையை பெற்ற லைகா நிறுவனம் தமிழ் திரையுலகில் முதல் முறையாக ஒரு படத்தை ஸ்கை டைவிங் மூலம் விளம்பரம் செய்வதாகவும் அறிவித்துள்ளது. இந்த தகவல் அஜித் ரசிகர்களுக்கு பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியது என்பது குறிபிடத்தக்கது.

ஆனால் நெட்டிசன்கள் ’துணிவு’ படத்திற்கு முன்பே சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த ’2.0’ படம் ஸ்கை டைவிங் மூலம் விளம்பரம் செய்யப்பட்டது என ஆதாரத்துடன் புகைப்படத்தை வெளியிட்டு உள்ளனர். சன் பிக்சர்ஸ் தயாரித்த இந்த படம் அதே துபாயில் ஸ்கை டைவிங் மூலம் பிரம்மாண்டமான போஸ்டர் ஸ்கை டைவிங் மூலம் வெளியானது என்பதை நெட்டிசன்கள் குறிப்பிட்டுள்ளனர்.

இதனை அடுத்து ’துணிவு’ படத்திற்கு முன்பே சூப்பர் ஸ்டார் நடித்த ’2.0’ படத்தில் ஸ்கை டைவிங் மூலம் விளம்பரம் செய்யப்பட்டுள்ளது என தெரியவருகிறது.

More News

படுக்கை அறையில் பிகினி உடை.. 'கோமாளி' நடிகையின் வைரல் புகைப்படம்!

ஜெயம் ரவி நடித்த 'கோமாளி' படத்தில் நடித்த நடிகை படுக்கையறையில் பிகினி உடையுடன் எடுத்த புகைப்படத்தை தனது இன்ஸ்டாவில் பதிவு செய்துள்ள நிலையில் அந்த புகைப்படத்துக்கு சுமார் ஒரு லட்சம் லைக்குகள்

'பசங்க' படத்தின் குழந்தை நட்சத்திரமா இவர்? காதலியுடன் செம போஸ்!

இயக்குனர் பாண்டியராஜன் இயக்கத்தில் உருவான முதல் திரைப்படமான 'பசங்க' திரைப்படம் மிகப் பெரிய வெற்றி பெற்றது என்பதும் விமல் கதாநாயகனாக நடித்துள்ள இந்த படத்தில் கிஷோர்,

'பொன்னியின் செல்வன் 2' ரிலீஸ் தேதி அறிவிப்பு! செம வீடியோ வெளியிட்ட லைகா!

 மணிரத்னம் இயக்கத்தில் லைகா நிறுவனத்தின் சுபாஸ்கரன் தயாரிப்பில் உருவான பொன்னியின் செல்வன் திரைப்படம் கடந்த கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்னர் வெளியான நிலையில்

'வாரிசு - துணிவு' படங்களை அடுத்து மீண்டும் விஜய்-அஜித் படங்கள் மோதலா?

 தளபதி விஜய் நடித்த 'வாரிசு' திரைப்படம் மற்றும் அஜித் நடித்த 'துணிவு' திரைப்படம் ஆகிய இரண்டு படங்களும் வரும் பொங்கல் தினத்தில் வெளியாக உள்ளதை அடுத்து இரண்டு படங்களின் புரமோஷன்

'மாஸ்டர்' - 'தளபதி 67' படங்களில் உள்ள முக்கிய வித்தியாசம்: லோகேஷ் கனகராஜ்

தளபதி விஜய் மற்றும் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் முதல் முறையாக இணைந்த 'மாஸ்டர்' திரைப்படம் கடந்த ஆண்டு வெளியாகி மிகப்பெரிய வெற்றி பெற்றது என்பது தெரிந்ததே.