மருந்துகளின் விலையை 50 சதவீதம் வரை உயர்த்திக் கொள்ளலாம்..! தேசிய மருந்து பொருள் விலை நிர்ணய ஆணையம் அனுமதி.

  • IndiaGlitz, [Saturday,December 14 2019]

பெருமளவில் பயன்படுத்தப்படும் ஆன்டிபயாட்டிக் உள்ளிட்ட அத்தியாவசிய மருந்துகளின் விலையை உயர்த்திக் கொள்ள, தேசிய மருந்துப் பொருள் விலை நிர்ணய ஆணையம் அனுமதி அளித்துள்ளது.

இதனால் ஆன்டிபயாட்டிக், அலர்ஜி, மலேரியா மருந்துகள், பி.சி.ஜி.தடுப்பூசி உள்ளிட்ட 12 வகையான மருந்துகளின் விலை 50 சதவிகிதம் வரை அதிகரிக்கும்.

மூலப்பொருள்களின் விலையேற்றம், அந்நியச் செலாவணியில் ஏற்பட்டுள்ள மாற்றம் ஆகியவற்றை சுட்டிக்காட்டி, இந்த மருந்துகளின் விலையை உயர்த்த அனுமதிக்குமாறு உற்பத்தியாளர்கள் தரப்பில் இருந்து கடந்த 2 ஆண்டுகளாக கோரிக்கை விடப்பட்டு வந்தது. இதை ஏற்று இந்த விலை உயர்வு அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த மருந்துகள் முதற்கட்ட சிகிச்சை முறைகளில் பயன்படுத்தப்படுவதால், அவை சந்தையில் கிடைப்பதை அரசு உறுதி செய்ய விரும்புகிறது. இதை அடுத்தே விலை உயர்வுக்கு அனுமதி வழங்கப்பட்டிருப்பதாக கூறப்படுகிறது.

 

More News

எங்க ஊரையே காணும் சார்..! ராமநாதபுரத்தில் காணாமல் போன ஒரு கிராமம்.

சிட்டிசன் திரைப்படத்தில் வரும் அத்திப்பட்டி கிராமத்தைப் போல ராமநாதபுரம் மாவட்டம் கமுதி அருகே ஒரு கிராமத்தையே வாக்காளர் பட்டியலில் காணவில்லை என அக்கிராம மக்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.

தற்கொலை செய்த கணவன், துக்கம் தாளாமல் குழந்தையை கொன்று தானும் இறந்த மனைவி..!

டெல்லியில் கணவன் இறந்த அதிர்ச்சியில் மனைவி குழந்தையுடன் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார்.

சிவகார்த்திகேயனின் அடுத்த பட டீசர் ரிலீஸ் தேதி அறிவிப்பு

சிவகார்த்திகேயன் நடித்த 'ஹீரோ' படத்தின் டிரைலர் நேற்று வெளியாகி சமூக வலைதளங்களில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. அதுமட்டுமன்றி நேற்று இந்த படத்தின் சென்சார் தகவல் மற்றும்

தனுஷின் 'பட்டாஸ்' படத்தின் ஆச்சரியமான ரிலீஸ் தேதி!

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த 'தர்பார்' திரைப்படம் வரும் பொங்கல்'விருந்தாக திரைக்கு வெளியாக உள்ளது. இதனையடுத்து தனுஷ் நடித்த 'பட்டாஸ்' திரைப்படம் ஒரு வாரம் அல்லது

'தர்பார்' படத்தின் அட்டகாசமான அப்டேட்! முருகதாஸ் அறிவிப்பு

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த 'தர்பார்' திரைப்படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து தற்போது விறுவிறுப்பாக போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் நடைபெற்று வருகிறது.