NRC கொண்டு வந்தால் தமிழகத்தில் அனுமதிக்க மாட்டோம்.. அமைச்சர் ஆர்.பி. உதயக்குமார் சட்டமன்றத்தில் அறிவிப்பு.

  • IndiaGlitz, [Tuesday,January 07 2020]

NRC தமிழகத்தில் அமல்படுத்த நினைத்தால் அதை அதிமுக எதிர்க்கும் என அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் தெரிவித்துள்ளார்.

உள்ளாட்சி தேர்தல் நடந்து முடிந்த பின் தமிழகத்தில் இந்த ஆண்டின் முதல் சட்டமன்ற கூட்டத்தொடர் தொடங்கியுள்ளது. நேற்று அவை தொடங்கும் போது ஆளுநர் உரையுடன் தொடங்கியது. அப்போது எதிர்க்கட்சி தலைவர் ஸ்டாலின் குடியுரிமை திருத்த சட்டம் மற்றும் தமிழகம் சந்திக்கு பிரச்சனைகள் தொடர்பாக கேள்வி எழுப்பினார். ஆனால் அவருக்கு பேச வாய்ப்பு வழங்கப்படவில்லை. எனவே திமுக மற்றும் கூட்டணி காட்சிகள் வெளிநடப்பு செய்தன.

அதை தொடர்ந்து இன்று நடைபெற்ற கூட்டத்தில் NRC குறித்து கேள்வி எழுப்பப்பட்டது.

தமிழகத்தில் என்.ஆர்.சியை கொண்டுவந்தால் முதல் குரலாக அ.தி.மு.க எதிர்க்கும் என்று அமைச்சர் உதயகுமார் சட்டசபையில் தெரிவித்துள்ளார். தேசிய குடியுரிமைச் சட்டம் தொடர்பான விவாதத்தின்போது ஸ்டாலின் கேள்விக்கு பதிலளித்த ஆர்.பி உதயகுமார் இப்படி தெரிவித்தார். அசாமை தவிர வேறுஎந்த மாநிலத்திலும் என்.ஆர்.சி அமல்படுத்தப்படவில்லை. ஒருவேளை தமிழகத்தில் என்.ஆர்.சி அமல்படுத்த நினைத்தால் அதனை அ.தி.மு.க எதிர்க்கும் என்று உதயகுமார் பேசியுள்ளார்.