கமல்ஹாசனுக்கு கிடைத்த புதிய மரியாதை!

  • IndiaGlitz, [Monday,November 18 2019]

தமிழ் திரையுலகில் மட்டுமின்றி இந்திய திரையுலகிலும் காலடி எடுத்து வைத்து உலக நாயகனாக வலம் வந்து கொண்டிருக்கும் கமல்ஹாசன் திரையுலகில் அறிமுகமாகி 60 ஆண்டுகள் ஆனதையடுத்து நேற்று ‘கமல்ஹாசன் 60’ என்ற பாராட்டு விழா நடைபெற்றது. இந்த விழாவில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், இளையராஜா உள்ளிட்ட பிரபலங்கள் கலந்து கொண்டனர்

இந்த நிலையில் கமல்ஹாசன் ஏற்கனவே பல விருதுகளையும் பட்டங்களையும் பெற்றுள்ள நிலையில் தற்போது அவருக்கு கெளரவ டாக்டர் பட்டமும் கிடைத்துள்ளது. நடிகரும் மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவருமான கமல்ஹாசனுக்கு கெளரவ டாக்டர் பட்டம் வழங்குவதாக ஒடிஷா மாநிலத்தில் உள்ள செஞ்சுரியன் பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது

நாளை ஒடிஷா பல்கலையில் நடக்கும் பட்டமளிப்பு விழாவில் ஒடிஷா முதல்வர் நவீன் பட்நாயக் அவர்கள் கமல்ஹாசனுக்கு இந்த கெளரவ டாக்டர் பட்டத்தை வழங்கவுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது

More News

கணவனுக்கு டீ போட்டு கொடுக்க மறுத்த மனைவிக்கு ஏற்பட்ட மிகப்பெரிய இழப்பு!

வேலைக்கு சென்று வீடு திரும்பிய கணவனுக்கு டீ போட்டு கொடுக்க மறுத்த மனைவி வாழ்நாள் முழுவதும் கஷ்டப்படும் வகையில் அவருக்கு மிகப்பெரிய இழப்பு ஏற்பட்டுள்ள அதிர்ச்சி சம்பவம் ஐதராபாத் அருகே நடந்துள்ளது

ஐந்து வருடங்களுக்கு பின் மீண்டும் சூர்யா எடுக்கும் அவதாரம்

இயக்குநர் சுதா கொங்கரா இயக்கத்தில் சூர்யா நடித்துவரும் 'சூரரைப்போற்று' என்ற திரைப்படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் முடிவடைந்த நிலையில், தற்போது இந்த படத்தின் தொழில்நுட்ப பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது 

ரஜினியின் அதிசயம்-அற்புதம் குறித்து அமைச்சர் ஜெயக்குமார் கருத்து!

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நேற்று கமல்ஹாசனுக்கு நடைபெற்ற பாராட்டு விழாவில் கலந்து கொண்டு பேசியபோது, 'தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி குறித்தும் தமிழக அரசு குறித்தும் ஒரு கருத்தை தெரிவித்தார். 

8 வருடங்கள் கழித்து திடீரென மீண்டும் விரதம் இருக்கும் நயன்தாரா

லேடி சூப்பர்ஸ்டார் நயன்தாரா தான் நடிக்கும் படங்களில், ஏற்றுக்கொண்ட கேரக்டரில் ஒன்றிப் போய் விடுவார் என்பது அனைவரும் அறிந்ததே. இதனால்தான் அவர் பல வெற்றிப்படங்களை கொடுத்து லேடி சூப்பர் ஸ்டார் என்ற பட்டத்தை பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது 

தண்ணீரில் மூழ்கிய இளைஞர்: மதுபோதையில் வேடிக்கை பார்த்த நண்பர்கள் 

கர்நாடக மாநிலத்தில் உள்ள கலபுராகி என்ற பகுதியில் உள்ள கல்குவாரி ஒன்றில் தண்ணீரில் குளித்து கொண்டிருந்த இளைஞர் ஒருவர் திடீரென மூழ்கியபோது