close
Choose your channels

ஹரிஷ் கல்யாண் - ப்ரியா பவானிசங்கரின் காதலுக்கு வைக்கப்பட்ட டைட்டில்!

Thursday, October 1, 2020 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

கடந்த இரண்டு நாட்களாக நடிகர் ஹரிஷ் கல்யாண் மற்றும் நடிகை பிரியா பவானி சங்கர் ஆகியோர் காதலித்து வருவது போன்ற புகைப்படத்தை தங்களது சமூக வலைத்தளத்தில் பதிவு செய்து பெரும் பரபரப்பை ஏற்படுத்தினார்கள். மேலும் இந்த பதிவுக்கு மட்டுமே இருவருமே கமெண்ட் பகுதியை தடை செய்ததால் ரசிகர்களின் எதிர்பார்ப்பு எகிறியது.

ஆனால் இந்த பரபரப்பு அவர்கள் இருவரும் இணைந்து நடித்து வரும் ஒரு திரைப்படத்தின் புரமோஷன் என்பது தெரியவந்தது. தெலுங்கில் சூப்பர் ஹிட் வெற்றி பெற்ற ’பெல்லி சுப்லு’ என்ற படத்தின் தமிழ் ரீமேக்கில் இருவரும் நடித்து வந்த நிலையில் இந்த படத்தின் புரமோஷனுக்காகவே இருவரும் சமூக வலைத்தளங்களில் பரபரப்பை ஏற்படுத்தினார்கள் என்று கூறப்பட்டது.

இந்த நிலையில் இந்த படத்தின் டைட்டில் சற்றுமுன் நடிகர் விஜய் தேவர்கொண்டா அவர்களின் சமூக வலைத்தள பக்கத்தில் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த படத்திற்கு ’ஓ மணப்பெண்ணே’ என்ற டைட்டில் வைக்கப்பட்டுள்ளது. ஹரிஷ் கல்யாண் மற்றும் பிரியா பவானிசங்கர் காதல் நாடகத்திற்கு ’ஓ மணப்பெண்ணே’ என்ற டைட்டிலின் மூலம் முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

கார்த்திக் சுந்தர் என்பவர் இயக்கவுள்ள இந்த படத்திற்கு விஷால் சந்திரசேகர் இசையமைக்கின்றார். கிருஷ்ண வசந்த் ஒளிப்பதிவில் கிருபாகரன் படத்தொகுப்பில் உருவாகும் இந்த படத்தை ஹவிஷ் புரடொக்சன்ஸ் என்ற நிறுவனம் தயாரித்து வருகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.