OLX மூலம் ரூ.100 கோடிக்கு மேல் மோசடி.. தீரன் படம் போல் முகாமிட்டு பிடித்த தமிழக போலீஸ்..!

  • IndiaGlitz, [Saturday,February 29 2020]

ராஜஸ்தான் மாநிலம் பரத்பூர் என்ற இடத்தில் துநாவல் என்ற கிராமமே வங்கி மோசடியில் ஈடுபட்டது விசாரணையில் அம்பலமாகியுள்ளது.

தீரன் பட பாணியில் ஏடிசி சரவண குமார் தலைமையில் சென்ற தனிப்படை போலீசார், ராஜஸ்தான் மாநிலம் பரத்பூர் மாவட்டத்தில் ஒரு வாரம் முகாமிட்டு துநாவல் கிராமத்தில் இருந்த இருவரை கைது செய்துள்ளனர். கிராமத்தில் ஓஎல்எக்ஸ் கொள்ளையர்களைப் பிடிக்கும் போது அங்குள்ள மக்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

பின்னர், கிராம மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி தமிழக போலீசார் அந்த இருவரை கைது செய்துள்ளனர். நரேஷ் பால் சிங், பச்சு சிங் ஆகிய இருவரை கைது செய்து அங்குள்ள நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, தமிழக போலீசார் சென்னைக்கு அழைத்து வந்து கொண்டிருக்கின்றனர்.

ராணுவ அதிகாரி எனக்கூறி பொருட்களை விற்பனை செய்யும் தளமான OLX மூலமாக பொருட்களை விற்பதாக கூறி ரூ.100 கோடிக்கு மேல் இந்தியா முழுவதும் மோசடி செய்தது விசாரணையில் அம்பலமாகியுள்ளது. கொள்ளையடித்த பணத்தை கிராமமே பங்கிட்டு சொகுசாக வாழ்ந்து தெரியவந்துள்ளது. சென்னையில் மட்டும் நூற்றுக்கணக்கான புகார்கள் பதிவாகியுள்ளன. பணப்பரிவர்த்தனை செயலி மூலம் அனைவரிடமும் கொள்ளை அடித்துள்ளனர்.

More News

2021 தமிழகச் சட்டமன்றத் தேர்தல் – அரசியல் வியூகம், அரியணை யாருக்கு??? 

காமராஜர், அண்ணா, எம்.ஜி.ஆர், கருணாநிதி, ஜெயலலிதா என்று மூத்த தலைமைகளை களம் கண்ட தமிழகத்தின் முதலமைச்சர் அரியாசனத்தை அடுத்து யார் பிடிக்கப் போகிறார்?

டெல்லி கலவரம்: தமிழ் திரைப்பட இயக்குனர்கள் கண்டனம் 

சமீபத்தில் டெல்லியில் நடைபெற்ற சிஏஏ எதிர்ப்பு போராட்டத்தில் திடீரென வன்முறை ஏற்பட்டு அது கலவரமாக மாறியது.

ரஜினிக்கு நான் சொல்லி தெரிய வேண்டியது எதுவுமில்லை: அபுபக்கர் 

சிஏஏ சட்டம் குறித்து ரஜினிகாந்த் தெரிவித்த கருத்துக்கு இஸ்லாமிய அமைப்பினர் கண்டனம் தெரிவித்து வந்தது தெரிந்ததே. இந்த நிலையில் ரஜினிகாந்த் இஸ்லாமிய

ரஜினியுடன் இஸ்லாமிய பிரமுகர் சந்திப்பு: சிஏஏ குறித்து பேச்சுவார்த்தை?

குடியுரிமை சீர்திருத்த சட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து நாடு முழுவதும் இஸ்லாமிய அமைப்பினர் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

டாக்டர் மனைவிக்கு ஐஏஎஸ் அதிகாரி விதித்த வித்தியாசமான நிபந்தனை!

டாக்டர் பெண்ணை திருமணம் செய்து கொண்ட ஐஏஎஸ் அதிகாரி ஒருவர் விதித்த வித்தியாசமான நிபந்தனை பெரும் அவரது சொந்த ஊரை சேர்ந்த பொதுமக்களை பெரும் ஆச்சரியம் அடைய வைத்துள்ளது.