ஒலிம்பிக் ஹாக்கி: இந்திய ஆடவர் அணி அதிர்ச்சி தோல்வி!

  • IndiaGlitz, [Tuesday,August 03 2021]

டோக்கியோவில் நடைபெற்று வரும் ஒலிம்பிக் ஹாக்கி போட்டியில் பெல்ஜியம் அணியிடம் இந்திய அணி அதிர்ச்சி தோல்வி அடைந்ததால் இந்திய ரசிகர்களுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது

ஒலிம்பிக் ஆடவர் ஹாக்கி போட்டியில் இந்திய அணி அரையிறுதிக்கு தகுதி பெற்றிருந்த நிலையில் இந்த போட்டியில் வெற்றி பெற்றால் கண்டிப்பாக பதக்கம் உறுதி என்ற நிலை இருந்தது. இதனையடுத்து பெல்ஜியம் அணிக்கு எதிரான போட்டியில் ஆரம்பத்தில் மிக அபாரமாக விளையாடிய இந்திய அணி அடுத்தடுத்து கோல் போட்டது. ஆட்டத்தின் 7வது நிமிடத்தில் இந்தியாவின் ஹர்மன்ப்ரீத் சிங் மற்றும் 8வது நிமிடத்தில் மந்தீப் சிங் ஆகியோர் அடுத்தடுத்து கோல் போட்டனர். இதனை அடுத்து இந்தியா 2-1 என்ற கணக்கில் முன்னிலையில் இருந்தது

இந்த நிலையில் இரண்டாவது கால் பகுதியில் பெல்ஜியம் அணி பெனால்டி மூலம் ஒரு கோல் அடித்ததால் 2-2 என சமமானது. மூன்றாவது கால் பகுதியில் இரு அணிகளும் கோல் அடிக்கவில்லை என்பதால் நான்காவது பகுதியில் இந்திய அணி கை ஓங்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் பெல்ஜியம் அணிக்கு அடுத்தடுத்து பெனால்டி கார்னர் வாய்ப்பு கிடைத்ததை அடுத்து, அதனை பயன்படுத்தி அடுத்தடுத்து 3 கோல்கள் போட்டு இந்தியாவை வீழ்த்தி இறுதி போட்டிக்கு தகுதி பெற்றது

இந்த ஆட்டத்தில் பெல்ஜியம் அணிக்கு மொத்தம் 14 பெனால்டி கார்னர் கிடைத்தது என்பதும் அவற்றில் மூன்றை கோல்களாக மாற்றி உள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது. இந்திய அணிக்கு 5 பெனால்டி கார்னர் கிடைத்ததில் ஒன்றை மட்டுமே கோல் ஆக மாற்றியது என்பதும், கடைசி 15 நிமிடங்கள் ஆட்டம் தலைகீழாக மாறி பெல்ஜியம் அணிக்கு வெற்றி கிடைத்தது என்பதும் குறிப்பிடத்தக்கது

இந்த நிலையில் இன்று மாலை நடைபெறும் ஆஸ்திரேலியா மற்றும் ஜெர்மனி அணிகளுக்கிடையிலான அரையிறுதி போட்டியில் தோல்வியுறும் அணியுடன் இந்தியா, வெண்கல பதக்கத்திற்கான போட்டியில் விளையாட உள்ளது பது குறிப்பிடத்தக்கது