சென்னையில் முதல் நாளிலேயே மால் விசிட் அடித்த தமிழ் நடிகை

  • IndiaGlitz, [Wednesday,September 02 2020]

கொரோனா வைரஸ் ஊரடங்கு காரணமாக கடந்த 5 மாதங்களாக சென்னையில் மால்கள் மூடப்பட்டிருந்த நிலையில் தமிழக அரசின் அனுமதியின் பேரில் நேற்று முதல் மால்கள் திறக்கப்பட்டன. தகுந்த பாதுகாப்பு ஏற்பாடுகளுடன் மால்கள் திறக்கப்பட்டதை அடுத்து பொதுமக்கள் மிகுந்த ஆர்வத்துடன் ஐந்து மாதங்களுக்கு பின் மால்களுக்கு விசிட் அடித்தார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் நேற்று முதல் நாளிலேயே பிரபல விஜே மற்றும் தமிழ் நடிகையுமான ரம்யா சுப்பிரமணியன் சென்னை வடபழனியில் உள்ள மால் ஒன்றுக்கு சென்றுள்ளார். இதுகுறித்து அவர் கூறியதாவது ’நீண்ட இடைவேளைக்குப் பின் நான் மால்கள் செல்வதில் மகிழ்ச்சி அடைந்தேன். அங்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்த அனைத்து பாதுகாப்பு ஏற்பாடுகளும் மிகவும் தரமாக இருந்தது.

முதலில் மால் உள்ளே செல்லும்போதே தெர்மல் ஸ்கேனர் மூலம் ஸ்கேன் செய்யப்பட்டது. அதில் எனது புகைப்படம் மற்றும் உடல் வெப்பநிலை கணக்கிடப்பட்டது. அதன் பின் என்னுடைய பேக் உள்பட அனைத்து பொருட்களும் ஆட்டோமேட்டிக் சானிடைசர் செய்யப்பட்டது. மால்களில் ஒவ்வொரு கடைக்குள் செல்லும்போதும் சானிடைசர்களை அந்தந்த கடை ஊழியர்கள் கொடுத்தனர். இதனால் மால்களுக்கு வரும் வாடிக்கையாளர்கள் மிகுந்த பாதுகாப்புடன் இருப்பதை உணர்ந்தனர்.

இதேபோல் பொதுமக்களும், மால்களில் உள்ள ஊழியர்களும் பாதுகாப்பு நடவடிக்கையை சரியாக கடைபிடித்தால் மால்கள் தொடர்ச்சியாக நல்லபடியாக இயங்கும் என்று அவர் தெரிவித்தார்.
 

More News

சூப்பர்ஹிட் படத்தின் ரீமேக் தான் சுந்தர் சியின் அடுத்த படமா?

கோலிவுட் திரையுலகில் முன்னணி இயக்குனர்களில் ஒருவரான சுந்தர் சி இயக்கத்தில் விஷால், தமன்னா நடிப்பில் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் 'ஆக்சன்' திரைப்படம் வெளியானது

ஒரே மாதத்தில் சிறுவனை 8 முறை துரத்தி துரத்தி கொத்திய பாம்பு!!! வினோதச் சம்பவம்!!!

உத்திரப்பிரதேசத்தில் ஒரு சிறுவனை பாம்பு ஒன்று 8 முறை துரத்தி துரத்தி தாக்கிய வினோதச் சம்பவம் நடைபெற்று இருக்கிறது.

கைலாசாவில் அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு: நித்திக்கு மதுரை இளைஞர் எழுதிய கடிதம்

இந்திய அரசால் தேடப்படும் பாலியல் குற்றவாளியான நித்தியானந்தா, கடந்த சில மாதங்களுக்கு முன்னர் கைலாசா என்ற நாட்டை உருவாக்கியுள்ளதாகவும் அந்த நாட்டிற்கு தானே அதிபர்

செல்போன் திருடனை மடக்கி பிடித்த சிறுமி!!! வைரல் வீடியோ!!!

பஞ்சாப் மாநிலத்தில் திருடன் ஒருவன் சிறுமியைத் தாக்கியபோதும் அவனுடன் சண்டையிட்டு சாதுர்யமாகச் செயல்பட்ட சிறுமியின் வீடியோ சமூக வலைத்தளத்தில்

கே.பாக்யராஜ் வீட்டில் நிகழ்ந்த சோகம்: திரையுலகினர் இரங்கல்

இந்தியாவின் மிகச் சிறந்த திரைக்கதை ஆசிரியர்களில் ஒருவரான கே பாக்யராஜின் வீட்டில் நிகழ்ந்த சோகம் ஒன்றுக்கு திரையுலகினர் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்