close
Choose your channels

ஊரடங்கு உத்தரவு எதிரொலி: மீண்டும் ராமாயணத்தை ஒளிபரப்பும் தூர்தர்ஷன்

Friday, March 27, 2020 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

கொரோனா வைரஸ் காரணமாக ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதால், இந்தியா முழுவதும் உள்ள கோடிக்கணக்கான மக்கள் வீட்டுக்குள் முடங்கி உள்ளனர். அத்தியாவசிய தேவை தவிர யாரும் வெளியே போவது இல்லை.

இந்த நிலையில் கோடிக்கணக்கான மக்கள் ஒரே நேரத்தில் வீட்டில் இருப்பதால் அவர்களுக்கு பொழுதை போக்க என்ன செய்வது என்று தெரியாமல் தவித்துக் கொண்டிருக்கின்றனர். இப்போதைக்கு அவர்களுக்கு இருக்கும் ஒரே பொழுதுபோக்கு தொலைக்காட்சி மட்டுமே.

இந்த நிலையில் தூர்தர்ஷன் தொலைக்காட்சி மீண்டும் ராமாயணம் சீரியல் ஒளிபரப்ப முடிவு செய்துள்ளது. கடந்த 1987 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 25ஆம் தேதி ராமாயணம் சீரியலின் முதல் எபிசோட் ஒளிபரப்பப்பட்டது. இந்த சீரியல் நாடு முழுவதும் மிகப்பெரிய வரவேற்பை பெற்று 1988 ஆம் ஆண்டு ஜூலை 31 ஆம் தேதி முடிவடைந்தது.

கிட்டத்தட்ட ஒன்றரை வருடங்கள் 78 எபிசோட் ஒளிபரப்பப்பட்ட இந்த சீரியலில் அருண்கோவில் என்பவர் ராமராகவும், தீபிகா சிக்ஹாலிலா என்பவர் சீதையாகவும் அரவிந்த் திரிவேதி என்பவர் ராவணனாகவும் நடித்திருந்தார் என்பதும், பின்னாளில் சீதையாக நடித்த தீபிகா, பாரதிய ஜனதா கட்சியில் இணைந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது. ராமாயணம் சீரியல் நாளை முதல் காலை 9 மணி முதல் 10 மணி வரை மற்றும் இரவு 9 மணி முதல் 10 மணி வரை ஒளிபரப்பபடும் என்றும் மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் தனது சமூக வலைத்தளத்தில் தெரிவித்துள்ளார்.

அதேபோல் தூர்தர்ஷனில் ஒளிபரப்பான மகாபாரதம் சீரியலையும் மீண்டும் ஒளிபரப்ப முடிவு செய்யப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.   

Related Videos