ஊரடங்கு உத்தரவு எதிரொலி: மீண்டும் ராமாயணத்தை ஒளிபரப்பும் தூர்தர்ஷன்

கொரோனா வைரஸ் காரணமாக ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதால், இந்தியா முழுவதும் உள்ள கோடிக்கணக்கான மக்கள் வீட்டுக்குள் முடங்கி உள்ளனர். அத்தியாவசிய தேவை தவிர யாரும் வெளியே போவது இல்லை.

இந்த நிலையில் கோடிக்கணக்கான மக்கள் ஒரே நேரத்தில் வீட்டில் இருப்பதால் அவர்களுக்கு பொழுதை போக்க என்ன செய்வது என்று தெரியாமல் தவித்துக் கொண்டிருக்கின்றனர். இப்போதைக்கு அவர்களுக்கு இருக்கும் ஒரே பொழுதுபோக்கு தொலைக்காட்சி மட்டுமே.

இந்த நிலையில் தூர்தர்ஷன் தொலைக்காட்சி மீண்டும் ராமாயணம் சீரியல் ஒளிபரப்ப முடிவு செய்துள்ளது. கடந்த 1987 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 25ஆம் தேதி ராமாயணம் சீரியலின் முதல் எபிசோட் ஒளிபரப்பப்பட்டது. இந்த சீரியல் நாடு முழுவதும் மிகப்பெரிய வரவேற்பை பெற்று 1988 ஆம் ஆண்டு ஜூலை 31 ஆம் தேதி முடிவடைந்தது.

கிட்டத்தட்ட ஒன்றரை வருடங்கள் 78 எபிசோட் ஒளிபரப்பப்பட்ட இந்த சீரியலில் அருண்கோவில் என்பவர் ராமராகவும், தீபிகா சிக்ஹாலிலா என்பவர் சீதையாகவும் அரவிந்த் திரிவேதி என்பவர் ராவணனாகவும் நடித்திருந்தார் என்பதும், பின்னாளில் சீதையாக நடித்த தீபிகா, பாரதிய ஜனதா கட்சியில் இணைந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது. ராமாயணம் சீரியல் நாளை முதல் காலை 9 மணி முதல் 10 மணி வரை மற்றும் இரவு 9 மணி முதல் 10 மணி வரை ஒளிபரப்பபடும் என்றும் மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் தனது சமூக வலைத்தளத்தில் தெரிவித்துள்ளார்.

அதேபோல் தூர்தர்ஷனில் ஒளிபரப்பான மகாபாரதம் சீரியலையும் மீண்டும் ஒளிபரப்ப முடிவு செய்யப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

More News

தமிழகத்தில் மேலும் 6 பேருக்கு கொரோனா? ஊரடங்கையும் மீறி பரவும் வைரஸ்

கொரோனா வைரஸ் தமிழகத்தில் மிக தீவிரமாக பரவி வருவதை தடுப்பதற்காக ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு, அந்த உத்தரவையும் கடுமையாக கடைபிடிக்க வேண்டும்

33 கோடி கொரோனா நிவாரண நிதி கொடுத்த சிஆர்பிஎஃப் வீரர்கள்

நாடு முழுவதும் கொரோனா பயத்தில் தற்போது இருக்கும் நிலையில், கொரோனா வைரசில் இருந்து மக்களை காப்பாற்ற மத்திய அரசு தீவிர முயற்சி செய்து வருகிறது

வீர இளைஞருக்கு கொரோனாவை கண்ணில் காட்டிய போலீஸ்

கொரோனா வைரஸ் பீதி காரணமாக நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்ட நிலையில் ஊரடங்கு உத்தரவையும் மீறி ஒரு சிலர் சாலைகளில் காரணம் இன்றி சுற்றித் திரிகின்றனர்

இந்த விலங்கிலிருந்துதான் கொரோனா வைரஸ் வந்திருக்கிறது..! அறிக்கை விட்ட ஆராய்ச்சியாளர்கள்.

அந்த விலங்குகளை ஒன்றும் செய்யாது. ஆனால் நம் உடலுக்குள் வைரஸ் எப்படியோ நுழையும் போது நம்முடைய நோய் எதிர்ப்பு மண்டலம் பலவீனமாக இருப்பதால் நமக்கு நோய் தொற்று வந்துவிடுகிறது.

கொரோனா தடுப்பு: உலகிற்கே முன்னுதாரணமாக இருக்கும் கியூபா??? எதனால்???

கொரோனா நோய்த்தொற்று பரவியதில் இருந்து ஒரு நாடு உலகம் முழுவதும் கவனம் பெற்று வருகிறது.