ஒருநாள் முழுக்க, ஒட்டுமொத்த நாடும் இருளில் மூழ்க்கிய பரபரப்பு சம்பவம்!!!

  • IndiaGlitz, [Tuesday,August 18 2020]

 

இலங்கையின் முக்கிய மின்சார வழித்தடத்தில் ஏற்பட்ட பாதிப்பால் நேற்று ஒட்டுமொத்த இலங்கையும் இருளில் மூழ்கியிருந்ததாகத் தகவல் வெளியாகி இருக்கிறது. கோவாலபிட்டியா பகுதியில் உள்ள துணை மின்வழித்தடத்தில் ஏற்பட்ட கோளாறு காரணமாக இச்சம்பவம் நடைபெற்றதாகவும் இலங்கையின் மின்சார வாரியம் தகவல் தெரிவித்து உள்ளது.

இச்சம்பவத்தால் பொதுமக்கள் கடும் அவதிக்குள்ளானதாகவும் செய்திகள் கூறுகின்றன. சாலைகளில் உள்ள மின்விளக்குகள், சிக்னல் போன்றவை இல்லாமல் போக்குவரத்திலும் கடும் சிரமம் ஏற்பட்டதாகவும் கூறப்படுகிறது. முக்கியமாக மருத்துவமனைகளில் இதனால் கடும் பதட்டம் நிலவியிருக்கிறது. 6 மணி நேர போராட்டத்திற்குப்பின் கொழும்பு மற்றும் தெற்கு மாகாணங்களில் மின்சாரம் வந்ததாகவும் செய்திகள் தெரிவிக்கின்றன.

கடந்த 2016 ஆம் ஆண்டு இலங்கையில் இதுபோன்று மின்சாரப் பழுது ஏற்பட்டதில் சதிச் செயல்கள் இருந்ததாகக் கூறப்படுகிறது. ஆனால் தற்போது ஏற்பட்ட மின்சாரப் பழுதில் எந்தவித உள்நோக்கமும் இல்லை என இலங்கையின் மந்திரி ஒருவர் தெரிவித்து இருக்கிறார். ஆனால் ஒட்டுமொத்த நாடும் மின்சாரம் இல்லாமல் இருளில் மூழ்கியச் சம்பவம் இலங்கையில் கடும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. இதனால் விசாரணைக்கு உத்தரவிட்டு இருப்பதாகவும் கூறப்படுகிறது.