close
Choose your channels

லாஸ் ஏஞ்சல்ஸ் திரைப்படவிழாவில் விருதுகளை அள்ளிக்குவித்த 'உத்தம வில்லன்'

Monday, November 16, 2015 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

கமல்ஹாசன் நடிப்பில் ரமேஷ் அரவிந்த இயக்கத்தில் கடந்த மே மாதம் வெளியான 'உத்தம வில்லன்' திரைப்படம் எதிர்பார்த்த வசூலை குவிக்க தவறினாலும், எதிர்பாராத விருதுகளை குவித்துள்ளது.

லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் நடைபெற்ற 'லாஸ் ஏஞ்சல்ஸ் சர்வதேச திரைப்பட விழாவில் 'உத்தம வில்லன்' திரைப்படம் ஐந்து விருதுகளை பெற்று கோலிவுட் திரையுலகிற்கு பெருமை சேர்த்துள்ளது.

சிறந்த படம், சிறந்த நடிகர் - கமல்ஹாசன், சிறந்த இசையமைப்பாளர் -ஜிப்ரான், சிறந்த பாடல் - ஜிப்ரான், சிறந்த சவுண்ட் எஞ்சினியர் - குணால்ராஜான் ஆகிய ஐந்து விருதுகளை 'உத்தம வில்லன்' பெற்றுள்ளது. மேலும் ரஷ்யன் சர்வதேச திரைப்பட விழாவில் இந்த படத்திற்கு சிறந்த இசையமைப்பாளர் விருது ஜிப்ரானுக்கு கிடைத்துள்ளது. ஒரே நேரத்தில் இரட்டை விருதை பெற்ற ஜிப்ரான் மகிழ்ச்சியில் உச்சத்தில் இருப்பதாக செய்திகள் வெளிவந்துள்ளது.

ஏற்கனவே ஏ.ஆர்.ரஹ்மான் இரண்டு ஆஸ்கார் விருதுகளை பெற்று பெருமை சேர்த்துள்ள நிலையில் ஜிப்ரானும் இரண்டு சர்வதேச விருதுகளை பெற்று கோலிவுட்டை சர்வதேச தரத்திற்கு உயர்த்தியுள்ளார். விருதுபெற்ற 'உத்தமவில்லன்' படக்குழுவினர்களுக்கு நமது வாழ்த்துக்கள்

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.