மேலும் ஒரு திமுக எம்எல்ஏவுக்கு கொரோனா தொற்று: அதிர்ச்சியில் தொண்டர்கள்!

கொரோன வைரஸ் தமிழகத்தில் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வரும் நிலையில் சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் அமைச்சர்களையும் கொரோனா தொற்று பாதிப்பு ஏற்படுத்தி வருவது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது

ஏற்கனவே திமுக எம்எல்ஏ ஜெ அன்பழகன் அவர்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி பலியான சம்பவம் திமுக தொண்டர்களிடையே பேரதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த நிலையில் சமீபத்தில் ரிஷிவந்தியம் தொகுதி எம்எல்ஏ வசந்தம் கார்த்திகேயன் அவர்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்

இந்த நிலையில் தற்போது வெளியான தகவலின்படி செங்கல்பட்டு மாவட்டம் செய்யூர் தொகுதி திமுக எம்எல்ஏ ஆர்டி அரசு அவர்களுக்கும் கொரோனா உறுதிசெய்யப்பட்டுள்ளது. இதனை அடுத்து அவர் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாக செய்திகள் வெளியாகி உள்ளது. கொரோனாவுக்கு திமுகவின் மூன்றாவது எம்.எல்.ஏ பாதிக்கப்பட்டிருப்பது அக்கட்சியின் தொண்டர்களை அதிர்ச்சி அடைய செய்துள்ளது.

ஏற்கனவே ஸ்ரீபெரும்புதூர் அதிமுக எம்எல்ஏ பழனி அவர்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. தமிழகத்தில் பாமர மக்களை மட்டுமின்றி பதவியில் இருப்பவர்களையும் கொரோனா வைரஸ் தாக்கி வருவது பேரதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது